Thursday, 28 July 2011

லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் நொறுங்கிப்போனது

நீண்ட கால இழுபறிக்கு பின்னர் லஞ்சம், ஊழல் தொடர்பான விசாரணைக்கமிட்டி லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்தது. இதில் சமூக ஆர்வலர்களின் யோசனை புறந்தள்ளப்ப்பட்டிருப்பதால் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் இது முற்றிலும் நொறுக்கப்பட்ட மசோதா என்று மற்ற தரப்பினரும் விமர்சனம் செய்துள்ளனர். பிரசாந்த் பூஷண் கூறுகையில்; வரைவு கமிட்டியில் அரசுதரப்பிலானவர்கள் அதிகம் இடம் பிடித்திருக்கின்றனர். இந்த மசோதா நிறைவேற்றம் அமைச்சர்களின் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் ஏற்கப்படவில்லை. இதில் சிறிய மாற்றம் என்பது பொய், முக்கியமான விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்களை தவறான பாதையில் அழைத்து செல்வதற்கு சமம் , இது கொடூரமான நகைச்சுவை மக்களின் உணர்வை புன்படுத்துவதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் தொடர்பு குறித்து விசாரிக்க முடியாமல் போய்விடும். பல் இல்லாத இந்த மசோதா , இது லோக்பால் இல்லை , இது ஜோக்பால் என்றும் விமர்சித்தனர். 2ஜி, காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட பெரும் ஊழல்வாதிகள் இந்த கட்டுக்குள் வராமல் போயிடுவர். பயனற்ற இந்த மசோதாவை ஏற்க முடியாது என்றனர்.

அரபு நாடுகளில் வலுத்து வந்த புரட்சியினை பார்த்து மத்தியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு பயத்தில் இருந்தது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஊழல்கள் மக்கள் மனதில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. அண்ணா ஹசாரே வராமல் இருந்திருந்தால் மக்களின் கொந்தளிப்பில் புரட்சி ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்தது. அந்த மக்கள் புரட்சி காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை இனி எக்கலாத்திலும் ஆட்சிக்கு வரமுடியாமலும் செய்திருக்கும் ஏன் காங்கிரஸ் என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது. இப்பொழுது மக்கள் அண்ணா ஹசறேயின் பின்னால் சென்று விட்டனர். அட நமக்காக போராட ஒரு தலைவன் கிடைத்து விட்டான் என்று அமைதியாகி விட்டனர். அதனால் தான் இவ்வளவு பிரச்சனையை மத்திய அரசு செய்கிறது. அண்ணா ஹசறேயின் போராட்டத்தை பிசுபிசுக்க பாபா ரம்தேவை ஏவியது பின்பு அது தனக்கே அப்பாக முடிந்த பின் அதையும் திசை திருப்பியது. இப்போது பாபா ராம்தேவ் அமைதியாகி விட்டார். போராட்டம் என்பது தனிமனிதனின் கையில் இல்லாமல் பொதுமக்கள் கையில் இருந்தால்தான் அதற்கு வெற்றி. அதேபோல் இந்த உண்ணாவிரதமும், போராட்டங்களும் அண்ணா ஹசாரே போன்ற தனி மனிதரின் கையிலோ அல்லது அரசியல் வாதிகளின் கையிலோ, சுயநலவாதிகளின் கையிலோ இருக்க கூடாது. இவர்களால் போரடதிற்கோ, உண்ணாவிரததிற்கோ மதிபிறுக்கது. 

பிரதமர் மட்டும் அல்ல ஊழல் செயும் அணைத்து தரப்பினரும் தண்டிக பட வேண்டும். அந்நிய நாடுகள் பிரதமர் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வந்தால் செயல் இழக்க செய்து விடும் என்ற அரசின் கருத்தை எந்த ஒரு குடிமகனும் ஏற்பதாக இல்லை. ஏனென்றால் மகளுககதான் அரசு... ஒரு இந்திய குடிமகன் தவறு செய்யும் பொது தண்டிக்க இந்திய அரசியல் சட்டம் வழி வகுக்கும் போது பிரதமர் ஆக இருக்கும் ஒருவர் லோக்பால் வரம்புக்குள் வர மாட்டார் என்றால் அவர் என்ன பாகிஸ்தான் ஐ சேர்ந்தவரா?! லஞ்சம் ஊழல் செய்து எப்படியாயாவது பிழைப்பது என்பது பெற்ற தாயையும் கட்டிய மனைவியையும் ஒரு சேர விபசாரியாக மற்ற நினைக்கும் ஒரு ஒழுங்கீனம் இல்லாத மனித சதை பிண்டத்தின் செயலாகும்.. அரசியல்வாதிகளை மட்டும் இதில் குறை கூற முடியாது.. ஒரு மின்சார வாரிய ஊழியர் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்க ஐம்பது ரூபாய் வரை வாங்குகிறார்.. இது யார் தவறு.. அந்த பணம் குடுக்கவில்லை என்றால் அந்த பழுது நீக்கப்பட வாய்ப்பே இல்லை.. இது போல அடுக்கி கொண்டே போகலாம்.. சட்டங்கள் கடுமை ஆக மனிதர்கள் ஆகிய நம் தன முயச்சி செய்யவேண்டும்.

No comments:

Post a Comment