The Great Dravidian Circus is now without its buffoon....
""வரும் உள்ளாட்சி தேர்தல் உட்பட இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், பா.ம.க., தலைமையில் மாற்று அணி அமைத்து போட்டியிடுவோம்; திராவிடக் கட்சிகளுக்கு இதில் இடமில்லை,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட, சுயமரியாதை அதிகம் உள்ள கட்சி பா.ம.க., தான். தமிழக மக்கள் மண்ணை, மொழியை, வாழ்வுரிமையை, பண்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை தடுக்கப்பட, பா.ம.க.,வினர் இனி கடுமையாக உழைப்பர். "டிவி' சேனல்கள் நமது பண்பாட்டை முழுவதுமாக சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பேன். நாணயத்தின் இரு பக்கத்தையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இவைகளால் மக்களுக்கு நன்மையும் கிடையாது; சமுதாயத்திற்கு எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக மக்கள் இலவசம் கேட்கவில்லை.
மக்கள்: இந்த வைராக்கியம் எத்தனை வருடத்திற்கு? பாமக: என்னது? எத்தனை வருஷமா? மக்கள்: சரி. எத்தனை மாசத்திற்கு? பாமக: என்னது? எத்தனை மாசமா? மக்கள்: சரி, சொல்லி தொலை!!! எத்தனை நாளைக்கு? பாமக: என்னது? எத்தனை நாளைக்கா? மக்கள்: கிழிஞ்சிது போ!!! அப்போ எந்தனை மணி நேரத்திற்கு இந்த வைராக்கியம்? பாமக: ரொம்ப கோவிச்சுக்காதிங்க!!! தானை தலைவர் (மு.க) எல்லாம் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த போது அவரிடம் எத்தனை நாளைக்கு உண்ணாவிரதம் இருக்க போகிறீர்கள் என்று கேட்டதுண்டா? காலை சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையில் தானே 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். அது போல் இபோதுதான் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி 2 நிமிடம் ஆகிறது. 1.
அட்ரா ராமா.. அட்ரா ராமா..... குட்டி கரணம் போடு.. குட்டி கரணம் போடு... அப்படியே அம்மா காலடியிலே போயி ஜம்ப் பண்ணி உக்காந்து ஒரு சலுட் அடி ராமா......
ஜோக்கர் இல்லாமல் ரம்மி ஆடமுடியாது..பா ம க இல்லாமல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்த முடியாது..ஜோக்கர் யாரோடவாவது கூட்டு சேர்ந்தே ஆக வேண்டும்..தனியாய் இருந்தால் ஒரு பயனும் இல்லை. ஆனால் பா ம க ஜோக்கர் ஆவதற்கு தகுதி இருக்கிறதா.
தீர்மானத்துல முக்கியமான ஒன்றை சொல்ல மறந்து போய்டங்கலாம். அது என்னன்னா அரை குறை அன்புமணிக்கு எந்த கட்சியாவது மந்திரி பதவி குடுத்தா மத்த தீர்மானமெல்லாம் காலாவதி ஆயிரும் என்பது தான் அது. ...
இவர் மகனுக்கு எம்.பி. பதவி கிடையாது என்று உறுதி யாகி விட்டது. அதனால் மன மாற்றம். இப்படியே ப.ம.க இருந்ததாக சரித்திரம், பூகோளம் எதிலும் சொல்ல பட வில்லை. நல்லாதான போய்கிட்டு இருந்துச்சி. எதுக்கு திடிர்ன்னு பெரியவர டைவர்ஸ் பண்ற? உன் தலைமையில புது கூட்டணி உருவாச்சின்னு வச்சிக்கோ இப்ப இருக்குற மூணு டவுசரும் டர்ர்ர்ரர்ர்ன்னு கிழிஞ்சிடும் அப்புறம் வெளியில தல காட்ட முடியாது பாத்துக்கோ....நீ பண்ற அக்க போரால என்னால வெளியில தல காட்ட முடியில...
டௌசரு, நான் ஒரு கேள்வி கேப்பேன் .. இது வரைக்கும் , நீ கச்சி ஆரம்பிச்சதுல இருந்து இன்னி வரைக்கும் , எப்போ எப்போ, யார் யாரோட, கூட்டணி வெச்சனு, உன்னால கரெக்டா சொல்ல முடியுமா !! பிச்சகாரன் கூட உன்ன விட மரியாதையா , சுய மரியாதையா இருக்கான் !! குடிகாரன் பேச்சை நம்பலாம் !! உன் பேச்சை உன் கட்சி பொதுகுழு ல இருக்கறவன் கூட நம்ப முடியாது !!
No comments:
Post a Comment