ஸ்டாலின் கைது ஏன் ? சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க, வினர் போராட்டம் நடத்தினர். இதில் திருவாரூர் கொடராச்சேரியில் மாணவர்கள் மறிக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் திரும்பி சென்று கொண்டிருந்த அரசு பஸ் லாரி மீது மோதி குளத்தில் விழுந்தது. இதில் சிக்கி மாணவன் விஜய் என்பவர் உயிரிழந்தார். இதற்கு மாவட்ட தி.மு.க.,வினரே காரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் என்பவரை கைது செய்ய போலீசார் இன்று திட்டமிட்டிருந்தனர். மொழிப்போர் தியாகி பக்கீர்மைதீன் படத்திறப்பு விழாவிற்கு மு.க., ஸ்டாலின் திருவாரூர் வந்தார். இவர் திருத்துறைப்பூண்டி அருகே மணலியில் வந்து கொண்டிருந்தபோது மாவட்ட எஸ்.பி., தினகரன் தலைமையில் போலீசார் ஸ்டாலினுடன் வந்த வாகனத்தை மறித்தனர். கலைவாணனை கைது செய்கிறோம் என்றனர். இதற்கு ஸ்டாலின் காரணம் எதுவும் இல்லாமல் மாவட்ட செயலரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் ஸ்டாலினையும் கைது செய்து திருவாரூர் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.
No comments:
Post a Comment