Wednesday, 13 July 2011

குடிபோதையில் நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் இறந்தார்.

குடிபோதையில் நண்பர்களால் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் இறந்தார். அவரது உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து, மறியலில் ஈடுபட முயன்றனர். கோவை, சாயிபாபாகாலனி,கே.கே.புதூர் -பெரியார் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(29); பெயின் டர்.

சந்தோஷ்குமாரும், நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து மது குடிக்க, சாயிபாபாகாலனி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்றனர். போதையில் ஏற்பட்ட தகராறில், நண்பர் கிருஷ்ணனை சந்தோஷ்குமார் தாக்கினார்.நண்பர்களின் சமாதானத்தையடுத்து, சந்தோஷ்குமார் மதுக்கடையில் இருந்து வெளியேறினார். போலீஸ் ஸ்டேஷன் சிக்னல் அருகே நின்றிருந்தபோது, அங்கு வந்த நண்பர்கள் டூ வீலரை மோதவிட்டனர். இதில் நிலை குலைந்து கீழே சரிந்த சந்தோஷ்குமார் சுயநினைவு இழந்தார்.

போலீஸ் ஸ்டேஷன் மிக அருகில் இருந்தும் போலீசார் எட்டிப் பார்க்கவில்லை. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த டிராபிக் போலீஸ்காரர், காயத்துடன் சுய நினைவிழந்து கிடந்த சந்தோஷ்குமாரை, ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலைவெறி தாக்குதலை கண்காணிப்பு காமிராமூலம் பார்த்த போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி, வாலிபரை தாக்கிய நான்கு பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அடுத்த ஒரு மணி நேரத்தில் நண்பர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment