"இலங்கை மீதான பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றியதற்காக, பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறோம். அதில், கலந்துகொள்ள வேண்டும்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம், நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் தலைமையில், திரை உலகினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வர் அதை நாகரிகமாக மறுத்துவிட்டார்.இசை வெளியீட்டு விழாவுக்கும், திரைப்பட சிறப்பு காட்சிக்கும், பாராட்டு விழாவுக்கும், பட்டிமன்றத்திற்கும் நாள்தோறும் சென்று வந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி, தேர்தலில் சந்தித்த நிலை அனைவரும் அறிந்ததே.யார் ஆட்சியில் இருந்தாலும், அவர்களோடு இணக்கமாக இருப்பதைப் போலவே காட்டிக்கொள்ள விரும்புகிறது, சினிமா உலகம்.இலங்கைக்கு பொருளாதாரத் தடை, வரவேற்கப்பட வேண்டியது தான்; அதற்காக பாராட்டு விழா எதற்கு? எதற்கெடுத்தாலும், யார் ஆட்சி செய்தாலும், விழா நடத்தி, ஆளும் தலைமையை கைக்குள் போட்டுக் கொள்ள சினிமா துறையினர் நினைக்கக்கூடாது.
மக்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளன; அதையெல்லாம் தீர்க்கவே முதல்வருக்கு நேரம் போதவில்லையே!
மக்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளன; அதையெல்லாம் தீர்க்கவே முதல்வருக்கு நேரம் போதவில்லையே!
No comments:
Post a Comment