Friday, 29 July 2011

கல்வியிலும் சமத்துவம் என்பதே தி.மு.க.,வின் நிலை

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்து, 29ம் தேதி(நாளை) மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.


"இருப்பது ஒரு உயிர்..அது நல்ல காரியத்துக்காக போகட்டுமே' என்று முரசு ஒலித்திருக்கிரார்கள்..  

சந்தோஷ படுங்க ஹிந்தி தெரிஞ்ச பீகாரிகள் இங்கு கூலி யாக உள்ளார்கள்...

ஹிந்தி யை நம்மை படிக்கவிடாமல் அவரது பேரன் தயாநிதி மாறனுக்கு ஹிந்தி தெரியும் என்பதற்காகவே மந்திரி பதவி வழங்கியவர் ஆச்சே நம்ம மகான் கலைஞர்...

  1. முதலில் சமதுவம் என்றால் என்ன என்று கருணாநிதி விளக்கவேண்டும். திமுகவில் சமத்துவம் உண்டா? 
  • கருணாநிதியால் கருணாநிதிக்காக கருணாநிதியைக் கொண்டு நடப்பதுதான் திமுக. அங்கே எங்கே சமத்துவம் வாழ்கிறது. எல்லாம் குடும்ப மயம். 
  • பெரிய மகன் அழகிரி மத்திய மந்திரி மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களுக்கு அவர் தான் திமுக பொறுப்பாளர். அழகிரியிடமுள்ள இரண்டு பதவிகளில் ஒன்றை கட்சிகாரர் ஒருவருக்கு கொடுத்து சமதுவத்தை நிலைநாட்டலமே இரண்டாவது மகன் ஸ்டாலின் தான் துணை முதல்வராகவும் இளைய்ஞர் அணித் தலைவராகவும் கட்ட்சியின் பொருளாரகாவும் மூன்று பதவிகளை வைதுக்கொண்டிருந்தார். இவைகளில் இரண்டை வாங்கி இரண்டு கட்சிக்காரர்களுக்கு கொடுதிருந்தால் சமத்துவநாயகன் என்ற பட்டம் கொடுதிருப்பார்கள்
  • மகள் கனிமொழி கருணாநிதியின் குடும்ப டி வி ல் 20 சதவீத பங்குதாரர் அந்த பங்குதாரர் பதவியை எந்த கட்சிக்காரருக்கும் கொடுக்க முடியாது. கனிமொழி எம் பி ஆக்கியதற்கு பதிலாக வேறு ஒரு மகளிருக்கு அந்த பதவியை கொடுதிருந்தால் மகளிருக்கும் சமத்துவம் கொடுக்கிறார் என்று சொல்லலாம். எல்லாம் இவர் குடும்பத்துக்கு என்று ஆனா பிறகு 
  • சமத்துவத்தை பற்றி கருணாநிதி பேசுவது வேடிக்கையாய் இருக்கிறது. சமச்சீர் கல்வி என்பது படிக்கும மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்துவது. ஒரு வகுப்பில் ஒரே மாதிரி புத்தகம். ஒரே ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரி பாடம் நடத்துகிறார். நன்றாக கவனித்து படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகிறார்கள். எலி நுழைந்து விட்டது வால் மட்டும் நுழையவில்லை என்று கூறும் மாணவன் தேர்வில் தேறுவதில்லை. இந்தமாதிரி மாணவர்களிடம் எந்த மாதிரி சமச்சீர் புத்தகத்தை கொடுத்தாலும் ரிசல்ட் ஒரே மாதிரிதான் இருக்கும் சமச்சீர் கல்வி என்று பேரில் கருணாநிதி மற்றும் அவர் மகள் கவிதைகளை படிக்க மாணவனுக்கு என்ன தலை எழுத்தா? சமச்சீர் கல்வி என்று புத்தகத்தை 200 கோடி செலவில் கமிஷன் பெற்றுக்கொண்டு அடித்து மாணவனிடம் கொடுது விடலாம். எல்லா மாணவர்களும் சமச்சீராக புத்திசாலிகளாக இருக்கவேண்டும் ஒரு மாணவனுக்கு கற்பூர புத்தி இருக்கும் இன்னொரு மாணவனுக்கு விறகுகட்டை புத்தி இருக்கும் இன்னொரு மாணவன் வாழை மட்டையாக இருப்பான். கருணாநிதியின் சமச்ச்சீர் கல்வி கவைக்கு உதவாது. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி. .  
  1. தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்பதில்லை என்பதிலே அவனுடைய நண்பர் கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும். ஒருநாள் அவர் புதிதாக வெளியாகி இருந்த தனது இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு “இதையெல்லாம் படியய்யா” என்றார். ஒரு புத்தகத்தை விரித்தான்.நல்ல பண்பாடுள்ள கதை அது! “வாழமுடியாதவர்கள்” என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது. கதையென்ன தெரியுமா??படிக்காதவர்களும் படித்துப் பயன்பெற வேண்டிய புண்ணிய கதையல்லவா! விபரமாகவே சொல்கிறேன். மனைவியை இழந்த ஒரு போலிஸ்காரன், வறுமை தவழ்ந்து விளையடும் சின்னஞ்சிறு வீடு அவனது குடியிருப்பு. மாண்டு போன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளைவிட்டுப் போயிருந்தாள். கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள். சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்குமவள் திருமணத்திற்காகக் காத்துக்கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன. திருமணம் வரவில்லை. ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான். அவன் அந்தப் புத்தகத்தை படித்து முடித்தான். தமிழ் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவன் நெஞ்சில் சூழ்ந்தது. அடுத்தடுத்து ‘குமரிக் கோட்டம்’, ‘ரோமாபுரி ராணிகள்’ ‘கபோதிபுரக் காதல்’ முதலிய நூல்களைப் படித்தான். அந்த நூல்களில் பலரிடம் கெட்ட ஒருத்தியைப் பளபளப்பாக வர்ணித்திருப்பார் கட்சியின் மூத்த தலைவர்….!?!.. ஓடிப்போனவள் கதியும், உருப்படாதவன் வாழ்க்கைச் சித்திரமும், ஆட்டங்கண்ட கிழவனுக்கு எழுந்த ஆசையும், அந்தி நேரத்துச் சுந்தரியின் தளுக்கும், நிரம்பி வழிந்த கழகப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாயின. ( பக்144/148 வனவாசம், கண்ணதாசன்.) சமூக விடுதலை என்ற சாயத்தைப் பூசிக்கொண்ட தலைவர்கள், உண்மையில் செய்ததெல்லாம் அங்க வர்ணனைகளின் பங்கு வர்த்தகம்தான். இதைத்தான் கண்ணதாசன் உதாரணத்தோடு உணர்த்தியுள்ளார். தமிழகத்தில்தான் இந்தத் தலைகீழ் ஆட்டம் சாத்தியம். ஆபாசக் குப்பைகள் அரசியல் அந்தஸ்து பெற்றது தமிழகத்தில்தான். எழுச்சியோடு உருவான படைப்புகள் சாதி அடையாளங்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதும் தமிழகத்தில்தான்.
  2. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திக , திமு க கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின. அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர். ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார். சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்தவர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள். பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது. கழக அரசியலை புரிந்து கொண்டு முற்றாக இவற்றை ஒதுக்கும் வரை தமிழக மக்களுக்கு விடிவு காலம் இல்லை !!

No comments:

Post a Comment