Saturday, 16 July 2011

மும்பை குண்டு வெடிப்புக்கு காரணம் யார்?

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே எந்தவொரு உளவுத் தகவலும் கிடைக்கவில்லை' என, கூறியிருந்தார்.
 
விசாரணை என்ற போர்வையில் கொஞ்சம் கொள்ளையடிக்க முடியும். அவ்வளவுதான். இழப்பு என்னவோ பாமரமக்களுக்குதான். ஆதங்கபடுவதை விட வேறு தெரியவில்லை..
 
அப்பாவிகளைப் பிடித்து அனாவசியமாக விசாரித்து இம்சிப்பார்களே தவிர உண்மையான தீவிரவாதிகள் யார் என்று கண்டுபிடிக்க தவற விட்டு விடுவார்கள்... இது எப்போதுமே நடந்து கொண்டிருக்கிற கூத்து...

குற்றம் நடப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், செயலிழந்து போன ஒரு உளவுத்துறையை கொண்டுள்ள இந்தியா வல்லரசாக மாறப்போகிறது என்று மார் தட்டி கொள்வது கேலிக்கூத்து. குற்றம் நடந்து முடிந்த பிறகு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறோம் என்று அறிக்கை விடுவதும், மும்பை மக்கள் பீனிக்ஸ் பறவை போல மீண்டு எழுவார்கள் என்று கொஞ்சம் கூட அசிங்க படாமல் பல ஆண்டுகளாக கூறி கொண்டிருப்பதும் ஆளும் வர்க்கத்திற்கு வாடிக்கை ஆகிவிட்டது. இதுவரை ஏதாவது ஒரு தீவிரவாத செயலை குற்றம் நடப்பதற்கு முன்னரே கண்டு பிடித்ததாக சரித்திரம் உண்டா? குற்றவாளிகளை பிடித்து மட்டும் என்ன கிழிக்க போகிறது இந்த அரசாங்கம்? எல்லா வசதிகளையும் கொண்ட சிறையிலே பல ஆண்டுகள் சுக போக வாழ்க்கை அனுபவிக்க வைக்க மக்களின் பல கோடி வரிப்பணத்தை வாரி இறைக்க போகிறது. இன, மொழி, மாநில எல்லை கடந்து இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவனையும் தன்னுடைய சகோதரனாக எண்ணும், இந்த மண்ணை நேசிக்கும், சொந்த மண்ணிற்கு துரோகம் செய்யும் கயவர்களின் கழுத்தை வெட்டி வீசும் ஒரு வீர புருஷன் இன்னுமா பிறக்க வில்லை?...

No comments:

Post a Comment