மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து, மகாராஷ்டிர போலீசாரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தாலும், குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர். குண்டுகளை வெடிப்பதற்காக பயன்படுத்திய ஸ்கூட்டர் ஒன்றைத் தவிர வேறு எந்தத் தடயமும் கிடைக்காததால், போலீசார் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். குண்டு வெடிப்பு நடந்த மூன்று இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என, தேடி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே எந்தவொரு உளவுத் தகவலும் கிடைக்கவில்லை' என, கூறியிருந்தார்
சதியாளர்கள் குண்டுகளை வைத்துவிட்டு சற்று அருகிலேயே நின்றுகொண்டு செல்போன் மூலமோ அல்லது ஏதேனும் ரேடியோ தொடர்பு கருவிமூலமோ அந்த குண்டுகளை செயல்படவைதிருக்கலாம். குண்டு வெடித்ததை உறுதிப்படுத்த தன் சக தீவிரவாதியை (மற்றொரு சம்பவ இடதிற்க்கருகே நின்றிருக்கும்) மொபைலில் தொடர்பு கொண்டிருக்கலாம். அப்படியிருந்தால்..அவ்விடங்களுக்கு அருகேயுள்ள செல் போன் டவர்களில் சம்பவ நேரத்தில் (10 நிமிடங்களுக்குள்) நடந்த பரிவர்த்தனைகளை ஆராயலாம். இதுவே பல ஆயிரம் தகவல்களாக இருந்தாலும் அவற்றை சுருக்குவதற்கு நேரம் தேவை. அணைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் கேமரா மற்றும் போலீஸ் இருப்பதால் அவர்கள் ரயிலில் வந்திருக்க வாய்ப்பில்லை. ரோடு வழியாகத்தான் வந்திருப்பார்கள். அது பேருந்துமூலமாகவோ(மும்பை பேருந்துகளில் கேமரா உள்ளதால் அதுவும் சந்தேகம் தான்) டாக்சியிலேயோ/ மோட்டார் வாகனங்களிலோ வந்திருக்கலாம். மும்பையில் மோட்டார் வாகனங்கள் குறைவு என்பதால் அதனையும் சுறுக்கி கண்டறிய வாய்ப்பதிகம். டாக்சியிலோ வந்திருந்தால் டிரைவர்களின் தகவல்கள் உதவலாம். நடந்து வந்திருந்தால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
ReplyDelete