நித்யானந்தா பேட்டி
""நில அபகரிப்பில் ஈடுபடும் நோக்கில், "மார்பிங்' முறை வீடியோவை ஒளிபரப்பி, என் மீது, சன்,"டிவி'யினர் பழி சுமத்தினர். அவர்கள் ராட்சதர்கள். தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதல், தனிப்பட்ட தாக்குதல் அல்ல; மத ரீதியான தாக்குதல். ராட்சதர்கள் மீது, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, நித்யானந்தா கூறினார்.
நாய் கடித்தால்...? : ஆசிரம், தியான பீடம் மீதான தாக்குதல் குறித்து குறிப்பிட்ட நித்யானந்தா, "என் ஆசிரமம், தியான பீடங்கள் மீது நடந்த தாக்குதலால், என் பக்தர்கள் எந்த அளவுக்கு வேதனைப்பட்டிருப்பர். அவர்கள் உங்கள் சிலைகளை ஆசிரமம் முன் வைத்து, செருப்பால் அடிக்க வேண்டும் என்று துடித்தனர். நான் தான், "நாய் கடித்தால் வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். திருப்பி கடிக்கக் கூடாது என்று, அவர்களை சமாதானப்படுத்தினேன்' என்றார்.
நடிகை ரஞ்சிதா பேட்டி
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் தனி அறையில் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள், சன் "டிவி'யில் தொடர்ந்து ஒளிபரப்பாகின. நாடு முழுவதும் உள்ள நித்யானந்தா தியான பீடங்கள் மீது தாக்குதல் நடந்தது. "டிவி'யில் ஒளிபரப்பான காட்சிகளில் உண்மை இல்லை; அவை "மார்பிங்' முறையில் உருவாக்கப்பட்டவை' என, நித்யானந்தா ஆசிரமம் விளக்கம் அளித்தது. நித்யானந்தரை பெங்களூரு போலீஸ் கைது செய்தது. பின் விடுவிக்கப்பட்ட அவர், "என்னிடம் 100 கோடி ரூபாய் கேட்டு, சிலர் மிரட்டினர். அதற்கு நான் ஒத்துவராததால், தாக்குதல் நடத்தியுள்ளனர்' என, பரபரப்பு பேட்டி அளித்தார்.















No comments:
Post a Comment