Sunday, 31 July 2011

தி.மு.க., உறவு முறிவுக்கு காரணம் பா.ம.க,வின் சுயலாபக் கணக்கே

தி.மு.க., அணியில் போட்டியிட்டு படுதோல்வி கண்டதால், அந்த அணியிலிருந்து விலகி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க., அதிரடி முடிவு எடுத்துள்ளது.பொதுக்குழுவில், கட்சிப் பிரமுகர்கள் தி.மு.க., வை கடுமையாக விமர்சித்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மட்டும், தி.மு.க.,வை விட்டு வெளியேறும் முடிவை பொறுமையாக எடுக்க விரும்பினார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் ஆதரவாளர்கள்,"தி.மு.க., கூட்டணி தேவையில்லை' என்ற முடிவை, உடனடியாக எடுக்க உறுதுணையாக இருந்தனர்.
 
இந்த நாட்டிலேயே சந்தர்ப்ப வாத அரசியலுக்கென்று புதிய இலக்கணம் எழுதிய பெருமை ராமதாசையே சேரும். ஒவ்வொரு முறையும் கூட்டணி மாறி பச்சோந்தியைவிட கேவலமானவர் என்று நிரூபித்து விட்டார்.. இன்னமும் இவரை எப்படி ஒரு தலைவர் என்று ஒப்புக்கொண்டு இவர் பின்னாலும் தொண்டர்கள் அலைகிறார்கள் என்று நினைக்கும் போது ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை பொய்க்கிறது . பதவி கிடைத்தால் 'யாருடனும் கூட்டணி போட இவருக்கு தயக்கமே இல்லை. என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்" என்று இவர் ஒருகாலத்தில் மக்களுக்கு ..தன் இன மக்களுக்கு ... சத்தியமே செய்து கொடுத்தார்.. யாருக்காவது ஞாபகம் இருக்காப்பா???????

குளத்திலே தண்ணியில்லே.. கொக்குமில்லே மீனுமில்லே... பொட்டியிலே MLA இல்லே.. கூட்டணிக்கட்சி சொந்தமில்லே.. அவன் போட்டக் கணக்கொன்று.. இவன் போட்டக் கணக்கொன்று.. இரண்டுமே தவறானது...பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வைச்சாரு. இவரு போன வருஷ மழையை நம்பி விதை விதைச்சார் எட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதிவைச்சாரு. ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு.
 
இரு கழகங்களுக்கும் ரோசம் வந்து (பாமக-விற்கு அதன் அகராதியில் இல்லாத சொல்!) பாமக-வை ஒதுக்கினால் போதும்! தமிழக அரசியல் கொஞ்சமாவது உருப்படும்!

No comments:

Post a Comment