Sunday, 3 July 2011

இரண்டு புற்றுக்கள் ..அவற்றில் இரண்டு கரு நாகங்கள்.

இரண்டு புற்றுக்கள் ..அவற்றில் இரண்டு கரு நாகங்கள்.ஊரையே பயமுறுத்தி நிம்மதியை கெடுத்துக்கொண்டிருந்தன..ஆனால் ஊர் மக்கள் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் ஏதேனும் ஒரு புற்றுக்கு பால் கொண்டு ஊற்றி வணங்குவதை பல தலைமுறையாக செய்து கொண்டிருந்தனர். இதில் எந்த பாம்பு அதிகம் தீமை செய்ததோ அந்த புற்றுக்கு குறைவான பாலும்,எது அதிகம் துன்பம் கொடுக்கவில்லையோ அதற்கு அதிகமான பாலும் ஊற்றி வந்தனர். ஆனால் இந்த இரண்டு பாம்புகளின் கொட்டமும் அடங்கவேயில்லை. மக்கள் விடாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க அந்த ஊருக்கு ஒரு ஞானி வந்தார். அவர் இந்த பிரச்சினையை கேள்விப்பட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்,"நீங்களே பாம்புக்கு பாலையும் வார்த்து வளர்த்து விட்டு பிறகு அது தீயது என சொல்வதில் என்ன லாபம்?.எனவே இப்படி செய்யுங்கள்.இந்த இரண்டு பாம்பையும் ஒரு சேர அழிப்பது கடினம். எனவே தொடர்ந்து நான்கு பெளர்ணமிக்கு ஒரே பாம்புக்கு பால் வாருங்கள்.அது என்ன கஷ்டம் கொடுத்திருந்தாலும் பொறுத்துக்கொண்டு!" மக்கள் அவ்வாறே செய்ய அந்த இன்னொரு பாம்பு மரித்தது. அப்போ ஞானி சொன்னார் "இனிமேல் இந்த மீதி உள்ள பாம்பிற்கும் பால் ஊற்றாதீர்கள் .அந்த பாலை ஏதேனும் ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள்"மக்களும் இவ்வாறே செய்ய ,அந்த இன்னொரு பாம்பும் அழிந்தது.மக்கள் பிறகு நிம்மதியாக வாழ்ந்தனர்.

No comments:

Post a Comment