ஒருமுறை கருணாநிதி அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது ஒபாமாவின் வீட்டை பார்த்து உங்கள் வீடு மிகவும் அருமையாக இருக்கிறது எப்படி இவ்வளவு அழகான வீட்டை கட்டினாய் என்று கேட்டார், உடனே ஒபாமா, அங்கே ஒரு பாலம் தெரிகிறதா? அந்த பாலம் கட்டும் போது, எனக்கு இந்த வீடு கட்டும் வாய்ப்பு கிட்டியது என்று சொன்னார். உடனே..கருணா வானத்தை அண்ணாந்து பார்த்தார்...சூரியனை பார்த்து சொன்னார்...இந்த நாள். இதே நாள்..உன் காலண்டர் ல குறிச்சு வச்சுக்கோ....நான் யாரு என் திறமை என்னான்னு இந்த உலகம் மூக்கு மேல விரல் வைக்குற காலம் வரும் அப்பிடின்னு டயலாக் அடிச்சாரு... உடனே ஒபாமா ( மனதுக்குள் ) என்னமோ சொல்ல நினைக்குறாரு ஆனா நமக்கு செம்மொழி தெரியாது. அதனால இவரு ஆக்சன்ல பண்ணும் போது தெரிஞ்சுக்கலாம்னு டாட்டா காமிச்சு அனுப்பிட்டாரு.. அடுத்த வருஷம் அதே நாள்...அந்த அதே நாள். ஒபாமா இந்தியா வந்தாரு. ஒரு நாள் தான் ட்ரிப் ஆனா தெரியாதனமா கருணாநிதி பத்தி டாபிக் வந்துட்டுது... உடனே ஒபாமா வுக்கு அந்த சூரியன் டயலக் நியாபகம் வந்துச்சு...நான் மிஸ்டர்.கருணாநிதியை பார்த்தே தீரனும் நு அடம் புடிச்சாரு...அப்போ நம்ம மோகன் துணிக்கடை தயாநிதிக்கு போன் போட்டு உங்க தாத்தா எங்கப்பா ன்னு கேட்டாரு... அவருக்கு வேற போக்கிடம் இல்ல சார் வீட்டுலதான் இருப்பாருன்னு சொன்னாரு. அது தெரியும்...தெருவுக்கு ஒரு வீடு வச்சுருந்தா...எந்த வீடுன்னு ஒழுங்கா சொல்லுப்பா...தயாநிதி உடனே..."யாதும் வீடே...யாவரும் கேளிர் " - ஒபாமா : ஆங் நல்ல பேசுறாரு ஆனா என்ன பேசுறாருன்னு தான் புரியல ன்னு சொன்னார். அவுங்க தாத்தா மாதிரி...இவனும். நல்ல பேசுவான் ஆனா யாருக்கும் புரியாது. ஒபாமா சொன்னாரு இதேமாதிரிதான் அந்த ஆளு அமெரிக்க வந்த போது ஏதோ சொன்னாரு ...அதை கேக்கதான் இப்போ அங்கே போகனும்னு சொல்லுறேன் ன்னு சொன்னாரு. இடம் : கோபாலபுரம் காட்சி 1 : மிஸ்டர் நிதி, அன்னிக்கு ஏதோ டயலாக் சொன்னீங்க எனக்கு ஒன்னும் புரியல...இப்போ சொல்லுங்க. உங்க வீடு(கள்) ரொம்ப நல்லா இருக்கு...எப்படி கட்டுனீங்க.....எல்லாம் நீங்க சொல்லி கொடுத்த ஐடியா தான் ஆனா ஒரு சின்ன சேஞ். நம்ம ஏன் பாலம் கட்டும் போது வீடு கட்டனும் ...முதல்ல வீட்டை கட்டிட்டு அப்புறமா சிமெண்டு மீதி இருந்தா...இங்க பாலம் வருது ன்னு சொல்லி ஒரு பில்லர் போட்டுறலாம் நு இருந்தேன். ஆனா மீதி சிமென்ட் இல்லன்னு சொல்லீட்டாங்க. அதனால இங்க பாலம் வருதுன்னு சொல்லி ஒரு பூமி பூஜை போட்டுட்டு நம்ம கழக வழக்கறிகர் அணியில ஒருத்தரை கோர்ட்ல ஸ்டே வாங்க சொல்லிட்டேன்...இனிமே அது ஐந்து ஆறு வருஷம் ஆகும்...நம்ம பேரக்குட்டிங்க எல்லாம் இப்போ ரொம்ப ஹைடெக் எ ஆட்டையா போட கத்துகிட்டாங்க ...சோ நோ ப்ரோப்லேம் மிஸ்டர் ஒபாமா.
No comments:
Post a Comment