Thursday, 28 July 2011

நல்ல வாயன் சம்பாதித்து நார வாயன் தின்ன கதை தான்

திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடி கொண்டே இருக்குது! அதை சட்டம் போட்டு தடுக்க வேண்டிய அரசு உதவி கொண்டே இருக்குது. தமிழகத்தில் முதலில் தனி நபர் ஊழல் இருந்தது. இப்போது பரிணாமம் அடைந்து குடும்ப ஊழலாக மாறி விட்டது. எல்லா புகழும் கலைஞருக்கே!

உலக வரலாற்றில் முதல் முறையாக நடந்த ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழலால் இந்தியர்களின் மானம் வெளி நாடுகளில் எல்லாம் கப்பல் ஏறி இருக்கிறது... ஏழை நாடான உங்கள் நாட்டிலேயா இவ்வளவு ஊழல் என்று வெளி நாடுகளில் வசிக்கும் எங்களிடம் அவர்கள் கேட்கும் போது.... உசுரே போகுதே எங்களுக்கு! பாவம் இந்திய ஏழை நாடு ஆனதே எங்கள் அரசியல் வியாபாரிகளால் தான் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? எங்கள் நாட்டின் ஊழல் ஒழிப்பு துறையின் அதிகாரியே (Chief Vigilance Commissioner) ஊழலின் கரை படிந்தவர் தான் என்று எங்களுக்கு தானே தெரியும்?  
இரத்தம் சிந்தி, உயிரை சிந்தி பெற்ற சுதந்திரம் எல்லாம் இவர்கள் சுதந்திரமாக கொள்ளை அடிக்க என்றல்லவா ஆகிவிட்டது? ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே.... சொந்த நாட்டிலேயே கேள்வி கேட்க உரிமை இன்றி இருக்கும் நாங்கள் அமெரிக்காவிலும் அண்டார்டிகாவிலும் எப்படி அய்யா கேட்க இயலும்? எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... ஒரு நாள் எகிப்தியர்களை போல போராடவும் துணிந்து உங்களை எல்லாம் வெளியில் அனுப்பி இந்தியாவிற்கு நிஜ சுதந்திரம் பெற்று தரும் நாள் வெகு தொலைவில் இல்லை....

கனியின் குறிப்புகளையும் - சமச்சீர் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டு மாணவர்களுக்கு சமச்சீர் புத்தககங்களை வழங்குங்கள் என்று கடந்த மாதம் கூறினீர் !!!!! ஆனால் இன்று மாணவர்களை போராட்டம் நடத்த வா, பள்ளியைப் புறக்கணி என்கிறீர் ???? பள்ளியைப் புறக்கனித்துதான் போராட்டம் நடத்த வேண்டும் என்று அவசியமில்லை??? அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. அதை மாணவர் சமுதாயம் பார்த்துக் கொள்ளும். இதற்கு முன்னர் மாணவர் அமைப்புகளும் ( SFI ) , பெற்றோர் அமைப்புகளும் போராட்டம் நடத்திய பொது அன்று அவர்களுக்கு ஆதரவாக நீர் அறிக்கையும் விடவில்லை,ஊழையும் விடவில்லை...... ஆனால் இன்று உம் கட்சிக்காரன் வீரபாண்டி, அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், தளபதி, என சகல பாண்டிகளையும் கைது செய்யப்படுவதை எப்படியாவது மக்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்ற குள்ளநரி வேலையைத்தான் செய்ய முற்படுகிறீர் !!!!!! இதை விட்டுவிட்டு உன் கட்சிக்காரனுக்கு நீர் முன் ஜாமீன் எடுக்கக் கூட முயற்சிக்கவில்லை. ஏனெனில் அனைத்தும் உம் கையை விட்டு மீறிப் போய்விட்டது..... ஏனெனில் எல்லோரிடமிருந்தும் கப்பம் வாங்கிவிட்டீர்!!!!! முடிந்தால் உம் கனியையும், ராசாவையும் கைது செய்து இன்றுவரை ஜெயிலில் வைத்ததிற்கு உம் கட்சிக்காரனை வைத்து போராட்டம் நடத்திப்பாரும்!!!! முடியாது. மாணவர்கள் பள்ளியைப் புறக்கணிக்கும் போராட்டத்திற்கு உம் கூட்டணி கட்சிகளைக் கூட்டிவாரும்!!!!! அதுவும் முடியாது உம்மால்??? கல்வி மேல் இத்தனை அக்கறை உள்ளவன் போல் பேசுகிறீ‌ரே, அப்படியிருந்தால் உம் பிள்ளைகளையும் , பேரப்பிள்ளைகளையும் டாக்டர், engineer , IAS , IPS , எனப் படிக்க வைத்திருந்தால் உம்மை பாராட்டலாம்!!!! அதை விட்டுவிட்டு கொலை, கொள்ளை.... என்பதைத்தான் போதித்துள்ளீர்!!!!! 

மந்திரிகுமாரி படத்தில் நீர் எழுதிய வசனத்தை உம் அடிபொடிகள் பின்பற்றியுள்ளார்கள்.... அதன் விளைவை இன்று நீர் கண்டுகொண்டிருக்கிறாய்.....இன்னும் வரும்.....

வாழ்க வளமுடன் முட்டாள் மக்கள்.

No comments:

Post a Comment