கே.டி சகோதரர்கள் இப்போதுதான் திமுக அழிவுக்கு காரணம் எனலாம்.ஆனால் மஞ்ச துண்டாரின் குடும்ப ஆதிக்கமே இதன் முழு முதற் காரணமாகும். தான் பெற்ற பிள்ளைகளின் பாசம் கண்ணை மறைக்க கட்சியை தென் மண்டலம் என்று பிரித்து அதற்க்கு அழகிரியை தலைவராக்கி "பாகப்பிரிவினையை" செய்தார். ஏதோ இந்த தேசம் இவர்கள் முப்பாட்டன் வீட்டு சொத்து போன்று "பிரித்து" கொடுத்தார். அப்படி செய்ததால் சகோதர சண்டையை "தற்காலிகமாய்" தவிர்த்தார். அழகிரியின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போய், ஒரு காலகட்டத்தில் கட்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களின் உயிருக்குகூட பாதகம் விளைவிக்க ஆயிற்று. தனது மகனை காப்பாற்ற நினைத்த இந்த மஞ்ச துண்டார்..கட்சியை பற்றி கவலை கொள்ளவில்லை. குடும்பத்தின் சகோதர சண்டையால் அவர்களது மகன்களுக்கு தாராள பண விநியோகம் நடந்தது. சினிமா தொழிலே இவர்களால் ஆட்டம் கண்டது. பெரிய பெரிய நிறுவனமான ஏவிஎம் போன்றோர் ஒதுக்கப்பட்டனர். இதனால் பொதுமக்கள் இவர்கள் மீதான கோபம் உச்சியை தொட்டது. தயாரிப்பாளர்கள் பலர் மிரட்டப்பட்டது இவர்களது குடும்பத்தால்தான். பொட்டு சுரேஷ் என்கிறமாதிரியான அல்லகைகள் தலைகால் புரியாமல் ஒவ்வோர் மாவட்டத்திலும் ஆட்டம் போட்டனர். வீரபாண்டி ஆறுமுகம் போன்றோரின் செயல்பாடுகளை மஞ்ச துண்டாரால் தடுக்க முடியவில்லை. ஏன் என்றால் "கப்பத்தை" இணைவி, துணைவி போன்றோரிடம் தவறாமல் செலுத்தப்பட்டதால்..!! பணத்தால் வாயை அடைத்தனர்.!! மகள் கனிமொழி பல்வேறு கல்லூரிகளின் நிர்வாகிகளை மிரட்டி, எந்த ஓர் தகுதியுமே இல்லாத இவரின் எம்.பி பதவியை கொண்டு கே.டி சகோதரர்களுக்கு "இணையாக" சொத்து சேர்க்க ஆசைப்பட்டு, ராசாவோடு சேர்ந்து "மெகா" ஊழலை செய்து, பல்வேறு பத்திரிகைகள் இவர்களின் தொடர்பை மறைமுகமாய் சொல்லியும்கூட இந்த மஞ்ச துண்டார் "கண்டிக்க"மறந்தார்.
பணம் அவர் கண்ணை மறைத்தது. அதனால் தன்மானம் பற்றிகூட சிந்திக்கவில்லை.!!
ஒருபுறம் வீட்டு வேலைக்காரிகூட ஓர் இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறையும் "தைரியத்தை"கண்டிக்கவில்லை..இணைவி வீட்டில் சரவணன் போன்ற ஒரு சிலரின் "கட்டுப்பாட்டை" கூட தட்டிகேட்க இயலாமல் போனார். இணைவி வீட்டில் ஏ.சி பழுது பார்க்க வந்த நபர்கூட அந்த வீட்டில் அதன் மகத்துவத்தை காட்டி ஏராளமாய் சம்பாதிக்க முடிந்தது. இப்படி இணைவி வீட்டின் ஆதிக்கம் விண்ணை தாண்டி அரசு செயல்பாட்டிலே தலையீடு கண்டது. இணைவி, துணைவி "..த்தி" சண்டை மறைமுகமாய் போட்டியை ஏற்படுத்தி மணல் கொள்ளையிலே பங்கு..அரிசி கடத்திலிலே "கப்பம்"..அடித்து பிடுங்கிய நிலத்தின் அபாரமான வருவாயிலே 'கப்பம்", அதிகாரிகளின் வேலை மாற்றத்திலே "கப்பம்"..அரசு வேலை வாங்கி தருவதிலே "கப்பம்', கலப்பட மருந்து விரபனையிலே "கப்பம்"..டெண்டரிலே கிடைக்கும் பாங்கினிலே "கப்பம்"..மந்திரிமார்கள் மாதம்தோறும் அழும் "கப்பம்"..வட்டம் மாவட்டம் போன்ற பதவிகளுக்கு கிடைத்த "கப்பம்'..போலிஸ் கேஸிலிருந்து விடுவிக்க அழும் "கப்பம்"..பெரிய பெரிய கட்டிடங்கள்..மற்றும் நில விற்பனையில் வரும் "கப்பம்"..இப்படி ஒவ்வோர் வகையிலும் ஏராளமாய்..தாராளமாய் இவர்களின் வீடு தேடி வந்து வீழ்ந்த "கப்பம்"..நாட்டின் நிர்வாகத்தை ஆட்டம் காண வைத்தது. ஆனால் இந்த மஞ்ச துண்டாரோ..ஏதோ மன்னர் ரேஞ்சிற்கு தன்னை நினைத்து கொண்டு "மானாட..மயிலாட என்று "பொத்த பூசணிக்காய்" போன்றோரின் ஆட்டத்திலே கட்டுண்டு.. நித்தமும் பட்டப்பெயரில் மூழ்கி நாட்டை மட்டுமல்ல..அண்ணா, அமரர் எம்.ஜி.யார் போன்றோரால் வளர்க்கப்பட்ட ஓர் மாபெரும் இயக்கத்தை குழி தோண்டி கேவலப்படுத்தி அழிவின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டார். அம்மாவின் கட்சி நடத்தும் "துணிச்சலில்" கிஞ்சித்தும் திறமை இல்லாதவரால் இந்த திமுக இயக்கம் அழிந்து போய்க்கொண்டுள்ளது.
- எமர்ஜென்சி காலத்தில் தன்னுயிர் நீத்த கட்சி பொறுப்பாளர்களின் குடும்பங்களை இன்று அனாதையாய் கைவிடப்பட்ட கோலத்தை என்னென்று சொல்ல?
- மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகளின் குடும்பத்தை இவர்கள் ஒதுக்கினார்கள்..! தனது ஒரே மகள் என்கிற ஒரே காரணத்தை தவிர எந்த ஓர் தகுதியுமே இல்லாதவருக்கு உடனே "எம்.பி " பதவியை அள்ளி வழங்கினார். போலிஸ் சித்திரவதை..அடிதடி சண்டை என்று பாடுபட்டவர்களுக்கு இதயத்திலே மட்டுமே இடம் கொடுத்து ஏமாற்றினார்.
- ."சுயநலம்" தனது "குடும்பம்" என்கிற அளவுகடந்து பாசமே இந்த திமுக தலைமையால் கட்சி "சீரழிந்து"போனது. கே.டி சகோதரர்கள் அதற்கோர் சாட்சி..!
No comments:
Post a Comment