Monday, 25 July 2011

தி.மு.க.,வீழ்ச்சிக்கு யார் காரணம் - part 1

"பலரின் கடுமையான உழைப்பால், தியாகத்தால் வளர்க்கப்பட்ட தி.மு.க., கலாநிதி, தயாநிதி சகோதரர்களின் சுயநலச் செயல்பாடுகளால், மக்களிடம் மதிப்பிழந்து, அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது,'' என்று மூத்த பத்திரிகையாளர் கிள்ளிவளவன் கூறினார்.பத்திரிகையாளர் அன்பழகன் (அன்பு) எழுதிய, "கே.டி., சகோதரர்கள் - உண்மையும்... ஊழலும்...' என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல், சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. 

'நிதி' சகோதரர்கள் மட்டுமா நாட்டை சூறை ஆடினார்கள். மொத்த குடும்பமும் அல்லவா தமிழகத்தை சூறை ஆடியது? அஞ்சா நெஞ்சன் அடித்து பிடுங்காததா? கட்சிக்காரர்கள் ஊரை அடித்து உலையில் போடவில்லையா?  கேடி சகோதரர்கள் இடையில் புகுத்து மங்களம் பாடியது இருக்கட்டும்; வருத்தம் என்னவென்றால் கருணாநிதி தன் குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு சம்பாதிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டு தமிழகத்தை கொள்ளை அடித்தது தான். கொலை, கொள்ளை நடப்பதை இவர் அரங்கேற்றி கொண்டிருந்தார். கேடி சகோதரர்களை குற்றம் சாட்டும் முன் இந்த பொது நல மக்கள் தொண்டு செய்யும் நபரை வசை பாடுங்கள். திருட்டு கூட்டம் இது. மக்களே கண்டு கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment