முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நேற்று காலை, தன் வீடு அமைந்துள்ள பூலாவாரியில் இருந்து, 50க்கும் மேற்பட்ட கார்கள், 100க்கும் மேற்பட்ட மொபட்டுகள் அணி வகுக்க, சேலம் மாநகருக்குள் ஊர்வலமாக வந்தார்.உயர்போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி, வாகனங்களைக் குறைத்து, கோட்டை மாரியம்மன் கோவில் வளைவு வரை, ஒன்பது கார்கள், விநாயக மிஷன் ஆம்புலன்ஸ் சகிதமாக சரணடைய வந்தார். பின்னர், முன்னாள் அமைச்சரின் கார் மட்டும் மாற்றுப் பாதை வழியாக, டவுன் போலீஸ் ஸ்டேஷன் நுழைவாயில் பகுதிக்கு வந்தது. அங்கு இன்ஸ்பெக்டர்கள், போலீசார் காத்திருந்தனர்.
வீரபாண்டி ஆறுமுகம் விசாரணையில் சிக்கிக் கொண்டது குறித்து, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூங்க கட்டில் வசதி சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீஸில் சரண் அடைந்துள்ள மாஜி அமைச்சரிடம், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர் இரவில் தூங்குவதற்கு போலீஸ் சார்பில் கட்டில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பெட்ஷீட் உள்ளிட்டவை, ஏற்கனவே அவரின் வழக்கறிஞர் மூலம் வரவழைக்கப்பட்டு விட்டது.
குற்ற சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுதபட்ட போதே இவ்வளவு விருந்தோம்பல் என்றால் குற்றவாளியாக கருதி சிறையில் அடைத்தால் சிறையில் சகல வசதியுடன் தான் வலம் வருவார்.....இப்படி விசாரித்து இவ்வளவு ராஜ மரியாதை செய்வதற்கு பதிலாக பேசாமல் வெளியிலேயே விட்டு விடலாம்.......தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் தற்போது இவ்வவாறு செய்வதை தவிர வேறு வழி இல்லை .
சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பாஸ்கரன் கூறியதாவது:வீரபாண்டி ஆறுமுகத்திடம், சேலம் மாநகர குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை முழுமையாக போலீஸ் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், அவர் நீதிமன்றம் அளித்துள்ள அவகாசம் வரை, விசாரணை நடக்கும் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்படுவார்.இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

No comments:
Post a Comment