Thursday, 14 July 2011

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு பாதிக்கப்படுவதென்னவோ ஒரு பாவமும் செய்யாத மக்கள்தான்

தன் மதம் மட்டுமே சரி என்று நினைப்பவன் முட்டாள்..பிற மதம் தவறு என்று நினைப்பவன் கோழை.. இனி இவர்கள் தீவிரவாதிகள் என்று அழைக்கபடுவதை விட கோழைகள் என்று அழைக்கப்படலாம. கொஞ்ச நாளைக்கு முன்னால தான் நாட்டுல ஆறு மாசமா ஒண்ணுமே நடக்க வில்லை என்று சிதம்பரம் அறிக்கை விட்டார் . உசுப்பேத்தி உசுப்பேத்தி நாட்டை ரணகளமாக்கி விடுகிறார். கையாலாகாத, செயல்படாத, கோழைத்தனமான மத்திய காங்கிரஸ் மன்மோகன் அரசு, எதற்கும் உதவாத ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம் இருக்கும் வரையில், இது போல் பேசுவதை விட்டுவிட்டு, இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டி முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டிய வழிகளை பாருங்கள். அதை விடுத்து நடந்த பிறகு சும்மா ஒரு ஒப்புக்கு ஆறுதல் சொல்வது யாருக்குத்தான் தெரியாது, மற்றதில் இருக்கும் திறமை (ஊளவு பார்ப்பது) இதில் இல்லை.

1 comment:

  1. இதற்கு முன் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள்:
    2010 டிசம்பர் 7: வாராணசியில் கங்கை நதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 வயது குழந்தை சாவு. 25 பேர் காயம்.

    2010 பிப்ரவரி 13: புணேயில் பிரபலமான ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தது. 17 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்.

    2010 நவம்பர் 26: மும்பையில் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்கியதில் 166 பேர் சாவு.

    2008 அக்டோபர் 30: அசாம் மாநிலத்தில் 18 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 77 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம்.

    2008 அக்டோபர் 21: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் காமாண்டோ போலீஸ் பயிற்சி வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில், 17 பேர் உயிரிழந்தனர்.

    2008 செப்டம்பர் 29: மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் குண்டு வெடித்தது. 5 பேர் கொல்லப்பட்டனர்.

    இதே நாளில் குஜராத்தின் மோதாசாவில் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.

    2008 செப்டம்பர் 27: தில்லி மெஹ்ரவ்லி சந்தையில் குண்டு வெடித்து, 3 பேர் உயிரிழந்தனர்.

    2008 செப்டம்பர் 13: தில்லி நகரில் 6 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 26 பேர் இறந்தனர்.

    2008 ஜூலை 26: குஜராத்தின் ஆமதாபாதில் இரண்டு மணி நேரத்தில் 20 இடங்களில் குண்டுகள் வெடித்தன. 57 பேர் உயிரிழந்தனர்.

    2008 ஜூலை 25: பெங்களூரில் குண்டு வெடிப்பில் ஒருவர் சாவு.

    2008 மே 13: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 68 பேர் பலியாயினர்.

    2007 அக்டோபர்: ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்ஹாவில் ரம்ஜான் பண்டிகையின் போது குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்தனர்.

    2007 மே: ஹைதராபாதில் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 11 பேர் சாவு.

    2007 பிப்ரவரி 19: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ரயிலில் எல்லைப் பகுதியில் வைத்து குண்டு வெடித்தன. 66 பயணிகள் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்.

    2006 செப்டம்பர்: மகாராஷ்டிர மாநிலம் மலேகானில் மசூதியில் இரட்டை குண்டு வெடிப்பு, 30 பேர் சாவு, 100 பேர் காயம்.

    2006 ஜூலை: மும்பையில் 7 ரயில்களில் குண்டு வெடித்தன. 200 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயம்.

    2006 மார்ச்: உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் கோவில், ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு. 20 பேர் சாவு.

    2005 அக்டோபர்: தில்லியில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் முக்கிய சந்தை பகுதிகளில் 3 குண்டுகள் வெடித்தன. 62 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம்.

    2003 ஆகஸ்ட் 25: மும்பையில் கேட் வே ஆஃப் இந்தியா, ஜவேரி பஜாரியில் குண்டு வெடிப்பு. 46 பேர் சாவு.

    2003 மார்ச் 13: மும்பையில் மகளிர் சிறப்பு ரயில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. 11 பேர் உயிரிழந்தனர்.

    2002 டிசம்பர் 2: மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 25 பேர் காயம்.

    ReplyDelete