சமீபத்திய புள்ளி விவரப்படி, நம் நாட்டின் மக்கள் தொகை, 121 கோடி. இதில், 40 சதவீத மக்கள், கிராமப்புறங்களில் வசிப்பதாக கூறப்படுகிறது. அன்று, "நம் ஆத்மாக்கள் கிராமங்களில் வசிக்கின்றன' என, காந்தி கூறினார். ஆனால், இன்று அந்த ஆத்மாக்கள், வறுமையில் வசிக்கின்றன.நம் நாட்டில் ஒருபக்கம், ஊழல் மூலம் சம்பாதித்த பல நூறு கோடி ரூபாயை, சுவிஸ் வங்கிகளில் சேமிக்கும் ஹசன் அலி போன்ற பலர் உள்ளனர். மறுபக்கம், 30 கோடி மக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழும், நாள் ஒன்றுக்கு, 10 ரூபாய் கூட வருமானம் இல்லாமலும் வசிக்கின்றனர்.
உலக நாடுகளில், 73 இடங்களில், இந்த கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதில், நம்மவர்களின் பணமே, முதன்மையானதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஹசன் அலியே, 3,600 கோடி ரூபாயை பதுக்கியுள்ளார் எனில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர்கள், எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பர் என்று நினைத்தாலே, தலை சுற்றுகிறது.
இப்படி, நம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டிய பணத்தை, சுவிஸ் வங்கிகளில் முடக்குபவர்கள், கொலைக் குற்றவாளிகளை விட, அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், அந்த ஊழல்வாதிகளை சிறைகளில் அடைத்தால், அந்த சிறைகளையே ஊழல் புரியாக மாற்றி விடுகின்றனர். அதை தான், கல்மாடி விவகாரத்தில் நாம் பார்த்தோம்
.சீனா போன்ற நாடுகளில், ஊழல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. அதுபோல், இங்கும் கடுமையான தண்டனை கொடுத்தால் தான், இந்த ஹசன் அலி போன்றோர் குற்றம் செய்ய அஞ்சுவர். இல்லையெனில், விரைவில் நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில், 50 சதவீதமாக உயர்ந்து விடும்.
ஏர்செல் விற்ற தமிழர் சிவசுப்ரமணியம் இன்று சிசெல் நாட்டு குடியுரிமை வாங்கியுள்ளார் ! அதை வாங்கிய தமிழர் மலேசிய குடியுரிமை உள்ளவர் ! இந்துஜா பிரிட்டிஷ் குடியுரிமையாளர் ! மிட்டல் பிரிட்டிஷ் குடியுரிமையாளர் ! இப்படி பல இந்தியர்கள் மற்ற நாட்டு குடியுரிமையாளர்கள் ! அவர்கள் பேரில் தானே பேரமே நடக்கிறது ! இப்படி யுள்ள யுஎஸ் ,பிரிட்டிஷ் குடியுரிமையில் எத்தனை இந்தியர்கள் உள்ளார்கள் என்று பாருங்கள் ! திடீர் என்று பல என் ஆர் ஐ காரர்கள் உலக கோடீஸ்வர லிஸ்டில் இடம் பிடிக்கிறார்கள் !
ReplyDelete