Monday, 25 July 2011

மன்மோகன் சிதம்பரம் மீது 2 ஜி ராஜா புகார் தயாநிதி பாதையில் நடந்ததாக தகவல்

குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஒரு வாய்ப்பை, கோர்ட் வழங்கும். அதன்படி நேற்று, முன்னாள் அமைச்சர் ராஜா, தன் வாதங்களை கோர்ட்டில் அடுக்கினார். அப்போது, ராஜா வழக்கறிஞர் சுஷில் குமார் கூறியதாவது:ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்களுக்கு, குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் வழங்கியது ஏன் என, சி.பி.ஐ., குற்றம்சாட்டுகிறது. 1,658 கோடி ரூபாய் வரை அளித்து, அவர்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்றனர். லைசென்ஸ் பெற்றுவிட்டதாலேயே எல்லாம் முடிந்துவிடாது. அதன் பிறகு, சேவையைத் துவங்குவதற்கு பல கட்டங்கள் உள்ளன. அதற்கு பணம் தேவை. அந்த சமயத்தில், மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், மிக முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது. அதுவரை, 49 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இருந்த வெளிநாட்டு முதலீட்டின் வரம்பை, 74 சதவீதமாக உயர்த்தியது. அரசாங்கத்தின் இந்த முடிவை பயன்படுத்தி, அந்நிறுவனங்கள் தங்களது பணத்தேவையை பூர்த்தி செய்ய முடிவெடுக்கின்றன. 

தன் விளைவாக பங்குகளை விற்கின்றன. இந்த பங்குகள் விற்பனை என்பது, முழுக்க முழுக்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடந்துள்ளது.இந்த யுனிடெக்,ஸ்வான் ஆகிய இரு நிறுவனங்களின் பங்குகளை விற்பது என முடிவெடுத்த போது, அதற்கான ஒப்புதலை அளித்தவர், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம். இந்த ஒப்புதலை அளித்த போது, பிரதமரும் (மன்மோகன் சிங் ) இருந்தார். 

மேலும், நான் மொத்தம் 9 நிறுவனங்களுக்கு லைசென்ஸ்கள் வழங்கினேன். ஆனால் ஸ்வான், யுனிடெக் என்ற இரண்டே இரண்டு நிறுவனங்கள் மட்டும் தான், திரும்பத் திரும்ப குறிவைத்து குற்றம்சாட்டப்படுகின்றன. பிற நிறுவனங்கள் குறித்து எதையும் பேச மறுக்கின்றனர். இவ்வாறு, பிற நிறுவனங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதன் பின்னணியில் மர்மம் இருப்பதாகவே சந்தேகிக்கிறேன்.

எனக்குப் பிறகு பதவியேற்ற அமைச்சர் கபில் சிபலோ, "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நயா பைசா அளவுக்குக் கூட நஷ்டம் ஏற்படவில்லை' என்கிறார். அதை விட, பிரதமர் மன்மோகன் சிங்கோ பலமுறை, "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நஷ்டம் ஏற்படவில்லை. அதில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுவது ஒரு கற்பனையான நஷ்டம்' என்று பேட்டியளித்துள்ளார்.ஸ்பெக்ட்ரத்தின் உரிமையாளர் என்பவர் அரசாங்கம் தான். அந்த அரசாங்கமே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு இல்லை என்று கூறுகிறது. உரிமையாளருக்கு எந்த நஷ்டமும் இல்லை எனும் போது, நான் எப்படி தவறு செய்தேன் என்று குற்றம் சுமத்துகின்றனர் என்பது புரியவில்லை.இவ்வாறு ராஜா கூறினார்.

1 comment:

  1. சில புள்ளி விபரங்களை சரியாக மறைத்து பேசினால் உண்மையாகி விடாது. இவர் தரப்பு வாதங்கள் முடிந்தபிறகு கண்டிப்பாக குறைந்தபட்சம் சில கேள்விகளுக்கு இவர் விடை சொல்லியே ஆக வேண்டும்.
    1) முந்தைய அமைச்சர்கள் ஏலம் இல்லாமல் குடுத்த பொது கைபேசி உபயோகிப்பாளர்கள் 1.3 கோடி இருந்தனர். இவர் அதே தவிட்டு விலைக்கு குடுக்கும்போது கிட்டத்தட்ட 53 கோடி கைபேசி உபயோகிப்பாளர்கள். அப்படி சந்தை மதிப்பு அதிகரித்த நிலையிலும் குறைந்த விலைக்கு கொடுத்தது ஏன்?
    2) 1500 கோடிக்கு குடுக்க முடிவெடுத்தபின் 15000 கோடி தர தயாராக இருந்த நிறுவனத்தினை (அவர் அந்த விலை கேட்டதற்கான கடித ஆதரம் வைத்துள்ளார்) இருந்த நிறுவனத்தினை கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் ?
    3) வேண்டிய நிறுவனங்களுக்கு உரிமம் முன் தேதியிட்டு குடுத்து முடுத்தது ஏன்? அவர்கள் மட்டும் அந்த நேரத்தினை அறிந்து வைப்புதொகையுடன் தயாராக இருந்தது எப்படி? 3) உரிமம் வாங்கிய நிறுவனங்கள் அதை நான்கு ஐந்து மடங்கு பாதி உரிமங்களை பங்குகளாக்கி பணம் பார்த்ததெப்படி?
    4) அப்படி பலமடங்கு பணம் பார்த்த நிலையிலும் அவர்களால் ஒரு ரூபாய்க்கு குறைவாக சேவை அளிக்க முடிந்ததென்றால் லாபமில்லாத அசல் விலைக்கு 25 பைசாவிற்கு இன்னும் குறைவாக சேவை அளிக்க முடியும் என்பதை சமச்சீர் கல்வியில் படிக்கும் மாணவன் கூட எளிதாக கணக்குபோட்டு அறியமுடியும் என்றிருக்கும் போது அரசு அறியாததேன்...?

    ReplyDelete