Thursday, 14 April 2011

தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்றால், "49 ஓ'வை பயன்படுத்தலாம்

தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை என்றால், "49 ஓ'வை பயன்படுத்தலாம் என்ற தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து, "ஓ' போடுவதில், வாக்காளர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதுவரை நடந்த தேர்தல்களில், போட்டியிடும் யாரேனும் ஒரு வேட்பாளருக்கு, ஓட்டு போட வேண்டிய நிலையில், வாக்காளர்கள் இருந்தனர். ஓட்டளிக்க விருப்பமில்லாதவர்கள், ஓட்டு போட செல்லாமல் வீட்டில் இருந்து கொள்வர். சமீப காலமாக, தேர்தல் கமிஷனின் புதிய விதிகள், அதிரடி மாற்றங்களால் ஓட்டளிக்க விருப்பம் இல்லாதவர்கள், "49 ஓ' படிவத்தை பயன்படுத்தலாமென அறிவித்தது. 2011 சட்டசபை தேர்தலில், "49 ஓ'வை,மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

இச்செயல், விழிப்புணர்வை காட்டுவதாக இருந்தாலும், அவர்கள், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதை தெளிவாகக் காட்டுகிறது. வேடசந்தூர் தொகுதியில், கல்வார்பட்டி, சூலப்புரம் ( இங்கு மட்டும் 40 பேர் "ஓ' போட்டதாக தெரியவந்துள்ளது), குஜிலியம்பாறை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் "49 ஓ'வில், பலர் ஓட்டளித்துள்ளதாக வெளிப்படையாகக் கூறுகின்றனர். இதற்காக அவர்கள் கூறும் காரணம் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

ஜனநாயகம் என்ற பெயரில் நடைபெறும் ஆட்சிகளில், ஊழல், குற்ற செயல்கள் மலிந்துவிட்டன. சுயநலத்திற்காக அரசின் கஜானாவை காலியாக்கும், இலவச அறிவிப்புகளை தேர்தல் கமிஷன் கட்டுப்படுத்த தவறி விட்டது என்கின்றனர். இதே நிலை நீடித்தால், வரும் காலங்களில், "49 ஓ'வில் ஓட்டளிப்போர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

என்னைபோல 49 ஓ பயன் படுத்திய ஒரு சிலரும், வாக்கு சாவடி பக்கமே தலை வைத்து பார்க்காத ரோஷமுள்ள மற்ற 20 % பேரும் அறிவிலிகளா? அல்லது பொறுப்பில்லாதவர்களா? சிந்திப்பவர்களின் சதவிகதம் குறைந்தது ஏன்? அரசியல் வாதிகள் எல்லாம் ஊழல் அற்றவர்களாக மாறி விட்டனரா? அரசியல் வாதிகள் மட்டும் அல்ல ; வாக்களிக்க செல்லாதவர்களும் குழம்பியுள்ளனர்... இலவசங்கள் தொடரட்டும்! ஊழல்கள் பெருகட்டும். சின்னை மீனை போட்டு பெரியமீன்களை பிடிக்கும் திமிங்கிலங்கள்

No comments:

Post a Comment