Saturday, 9 April 2011
தமிழினத் தலைவர் பதவிக்காக ,ஈழத்தில் சொந்த தமிழ் இனத்தையே கருவறுத்த நீங்கள் எங்கே ?
தன்னைத் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் கருணாநிதி,அவரது நான்கு மணித்தியால உண்ணா நோன்பு ஊரையும் உலகத்தையும் ஒரு சேர ஏமாற்ற அரங்கேற்றப்பட்ட நாடகமாகும். உண்மை என்னவென்றால் முதல்வர் நாற்காலியா இனமானமா என வந்தபோது அவர் நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இனமானத்தைக் காற்றில் பறக்க விட்டு விட்டார். மறைந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்த இழப்பு, சாவு வந்திருக்காது. "பதவி தோளில் போடும் துண்டு கொள்கை இடையில் கட்டும் வேட்டி" என்று அறிஞர் அண்ணா சொன்னதை வாயளவில் சொல்லிக் கொண்டிருந்தாரே ஒழிய முதல்வர் கருணாநிதி அதனை நம்பவில்லை. முள்ளிவாய்க்காலில் மக்கள் ஆயிரக்கணக்கில் செல்லடிகும் கொத்துக் குண்டுகளுக்கும் பலியாகிக் கொண்டிருந்த போது தள்ளுவண்டியில் தில்லி சென்ற முதல்வர் கருணாநிதி தனது மகன், மகள், பேரன் ஆகியோருக்கு பால் கறக்கும் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியோடு பேரம் பேசிக் கொண்டிருந்தார். கேட்ட அமைச்சுக்கள் கிடைக்கவில்லை என்றவுடன் "இனி காங்கிரசுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு" என்று புலுடா விட்டார். வாரிசுகளைக் கொண்டு வர திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல எனச் சொல்லி விட்டுத் தனது இரண்டாவது மகனுக்கு துணை முதல்வர் பட்டம் சூட்டிவிட்டார். வாரிசு அரசியலுக்கு தடையாக இருந்த வைகோ மீது கொலைப் பழி சுமத்தி அவரைத் திமுகவில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றினார். "நான் மிக மிகப் பிற்பட்ட வகுப்பில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சாமானியன்" என்று சொல்லிக் கொண்டு இன்று பல நூறு கோடிகளுக்குச் சொந்தக்காரனாகி கோபுரத்தில் குடியிருக்கிறார். அதே சமயம் அய்ந்து முறை முதல்வராக இருந்தும் அவரால் இரட்டைத் தம்ளர் முறையை ஒழிக்க முடியவில்லை. சாதிச் சுவர்களைத் தகர்க்க முடியவில்லை. தமிழ்மொழியை நீதிமன்ற மொழியாக்க முடியவில்லை. நிருவாக மொழியாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. தமிழைக் கற்கை மொழியாக அறிவிக்கவில்லை. தமிங்கிலத்தை ஒழிக்க முடியவில்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது நிறைவேறவில்லை. அறிஞர் அண்ணா காலத்தில் காங்கிரஸ் கட்சியை விழுத்துவதே அவரது இலட்சியமாக இருந்தது. முதல்வர் கருணாநிதியோ தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நேருவின் மகள் இந்திரா காந்தி காலிலும் இன்று சொக்கத் தங்கம், தியாக விளக்கு சோனியா காலிலும் விழுந்து கிடக்கிறார்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment