Thursday, 21 April 2011

இரு இந்தியாவா?

ஒரு பக்கம் ஒரு லட்சத்து எழுபத்தி ஆராயிரம் கோடி, மறு பக்கம் ஒரு வேலை சோற்றுக்கு திண்டாடும் மக்கள்? ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் திருந்தினால்தான் நாடு வளரும்.

மக்களுக்கு சேர வேண்டிய செல்வத்தை அரசியல் தலைவர்கள் சுருட்டோ சுருட்டு என்று கூட்டணி போட்டு சுருட்டினால் சாதாரண மக்கள் பஞ்சம் பட்டினியால் கண்டிப்பாக சாவர். ஒரு முறை நீங்கள் வெளி நாட்டுக்கு சென்று திரும்பி வந்தால் நம் அரசியல் வாதிகள் எப்படி எல்லாம் கொள்ளை அடித்து நாட்டை குட்டி சுவரு ஆக்கி வைத்துள்ளார்கள் என்பது தெரியும். வாய் சொல் வீரர்களே சம காலத்து சீனாவை பாருங்கள்; வெக்கி தலை குனியுங்கள். ஆயிரம் Gandhi வந்து நாட்டை மீட்க வேண்டும்.

இந்தியா வளமிக்க நாடு என்பது பழைய பெயர்
. இப்போ வளம் கெட்ட நாடு (, இயற்கை வளம் தரும் ஆறுகளை,பாழாக்கி மணல் எடுத்து ஆறுகளை காடுகளாக அரசே மாற்றி வரும் அவல நிலையும்/ அதுக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்குவதும் தொடர்ந்து நடைபெறும்வரை வளமான நாடுன்னு எப்படி சொல்றார் நீதிபதி.........

ஒருபுறம் தானியங்கள் வீணாகின்றன! மறுபுறம் பட்டினிச் சாவுகள்! கேட்டால் "அரசின் கொள்கை முடிவு" என்கிறார் மன்மோகன்! மக்கள் பட்டினியால் இறப்பதா காங்கிரசின் கொள்கை? ஒவ்வொரு முறையும் முறையும் சாட்டையடி பட்டாலும்கூட காங்கிரஸ் அரசு சுதாரிப்பதில்லை.

லஞ்சம் வாங்கினாலோ, உழல் செய்தாலோ, குறைந்த பட்ச தண்டனையாக " தூக்கு தண்டனை" வழங்க வேண்டும். அவர்கள் குடும்ப சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய்யவேண்டும், இது இரண்டும் குறைந்தாலே , இந்தியாவில், ஏழ்மை இருக்காது . முக்கியமாக அரசியல் வாதிகள் கைது ஆனால், ரெட்டை தூக்கு தண்டனை வழங்க வேண்டும், இல்லை என்றால் , அதிலும் , ஏதாவது , தப்பித்து விடுவார்கள்

நாட்டில் பட்டினிச் சாவு சம்பவங்கள் அதிகரிப்பதைக் கண்டு, கடும் கோபம் அடைந்துள்ள சுப்ரீம் கோர்ட், "ஏழை இந்தியா, பணக்காரர் இந்தியா என, இரு இந்தியாவா உள்ளது' என, மத்திய அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குறித்த சமீபத்திய விவரங்களைத் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.


நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொது வினியோக திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் முறைகேடும் நடைபெறுவதாக மக்கள் உரிமைக்கான சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் என்ற அமைப்பு, நாட்டில் அடிக்கடி நிகழும் பட்டினிச் சாவுகள், பொது வினியோக முறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.இந்த மனுவானது, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக்வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், பொது வினியோக திட்டத்தை சீரமைப்பதற்காக அரசு மேற்கொண்ட முயற்சியால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை பெருமளவில் குறைந்து வருவதாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நாட்டில் பெருகிவரும் பட்டினிச்சாவு குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டனர். பணக்காரர்களுக்கு ஒன்று ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியா இருக்க முடியாது என்றும் அப்போது அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அவர்கள் மேலும், ``இந்தியாவை சக்திவாய்ந்த நாடு என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் அமோக விளைச்சல் ஏற்பட்டு கிடங்குகளில் உணவு தானியங்கள் நிரம்பி வழிவதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

நாட்டில் பட்டினிச் சாவுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என, இரண்டு இந்தியா இருக்க முடியாது. நாட்டு மக்களில், 36 சதவீதம் பேர், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை குறைக்க, திட்ட கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா சக்தி வாய்ந்த நாடு என, பறை சாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அதேநேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடு என்பது, முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.பட்டினியில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானிய கையிருப்பு இருப்பதாக கூறிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. விளைச்சல் நன்றாக உள்ளது, அரசு குடோன்கள் நிரம்பி வழிகின்றன என்பதில் நமக்கெல்லாம் மகிழ்ச்சியே. ஆனால், மக்கள் இதனால் பலன் அடையவில்லை எனில், என்ன பயன்?

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை, 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, பல மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் வினியோகிக்க அதிகளவில் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கையை, 1991ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், திட்ட கமிஷன் தெரிவித்துள்ளது சரியல்ல. வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை இன்னும் ஒரு வாரத்திற்குள் திட்ட கமிஷன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

நம் நாடு ஏழை நாடு அல்ல. மற்ற நாடுகளை விட பணக்காரர்கள் அதிகம் செலவு செய்யும் நாடு இந்தியா தான். தனியார் துறையில் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்து மாதம் 3000 ரூபாய் பெரும் ஊழியர்களும் உள்ளனர். நடிகைகள் ஒரு விழாவுக்கு 5 நிமிடம் தோன்றி பத்து லட்சம் வாங்குபவர்களும் இருக்கின்றனர். ஒரு நடிகன் ஒரு படம் நடிக்க 25 கோடி வாங்குகிறான். அவன் வாங்கிய சம்பளத்திற்கு வருமான வரி கட்டினானா? எவ்வளவு பணம் கருப்பு பணமாக போகிறது. நடிகர் நடிகைகளுக்கு சம்பள உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அந்த பணத்திற்கு மேல் சம்பளம் வழங்க கூடாது. விளம்பரங்களுக்கும் பணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். சில சமயங்களில் பத்து செகண்டுக்கு பத்து லட்சம். கம்பெனிகாரர்கள் இந்த பணத்தை வரி என்கிற பெயரில், பொருட்களின் மேல் வைத்து சம்பாதிக்கின்றனர். அதனால் தான், விலைவாசி உயர்வு. ரஜினி சொல்கிறார், விலைவாசி உயர்வு என்று. அந்த விலை வாசி உயர்வுக்கு மறைமுகமாக அவரும் இருக்கிறார். அவரின் முதல் நாள் படத்தை பார்க்க, ஒரு டிக்கெட் 3000 ரூபாய். இந்த பணம் உண்மையாக உழைக்கும் ஒருவனால் கொடுக்க முடியுமா? ஏதாவது ஒரு வகையில் கொள்ளை அடித்தவன் தான் கொடுக்க முடியும்; அரசு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் குறைந்தது மாதம் 25000 க்கு மேல் வாங்குகிற்றனர். கிராம பள்ளிகூடங்களில் வேலை செய்பவர்கள் இந்த சம்பளத்திற்கு சமமான வேலை செய்வது இல்லை. அதே தனியார் Engish மீடியம் பள்ளிகூடங்களில் வேலை செய்பவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் சம்பளம். தனியார் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் 10 மடங்கு அதிகம் உழைப்பர். வெளிநாடுகளில், தனியார் பள்ளிகூடங்களிலும், அதே சம்பளத்தை தான் கொடுக்க வேண்டும். விவசாயிகள், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், நான்கு மாதம் கண்ணைப்போல கவனித்த நெற்பயிர்; பத்து மாதம் உழைத்த வாழை போன்றவையில், கடைசியில் பலன் பெறுவது வியாபாரிகள் தான். இதற்க்கு அரசாங்கம் எந்த முயற்சியும் எடுப்பது இல்லை. இப்படி பல குளறுபடிகளை சொல்லி கொண்டே போகலாம். நம் நாட்டில், இளம் தலைமுறையினர், ஆட்சிக்கு வந்து நியமான ஆட்சியை தர வேண்டும். இப்போது உள்ள முதியவர்கள் ஓய்வு எடுக்க செல்லலாம். அது அவர்களுக்கு மட்டும் அல்ல, நம் நாட்டுக்கு ரொம்ப நல்லது

No comments:

Post a Comment