உபதேசிப்பது யாருக்கு?
கழகங்களுக்கா? ஊருக்கு உபதேசம் செய்பவர்களுக்கு புத்தி சொல்லி பிரயோஜனம் இல்லை.
மக்கள் மாற வேண்டும் என்று சொல்லும் மகான்களுக்கு ஒரு வார்த்தை. மாற்றம் எப்போது வரும்?
சிந்திக்கும்போது. அதற்கு தெளிந்த மனநிலை வேண்டும். அன்றாட பாட்டுக்கு ஆளாய் பறப்போர் இங்கு அதிகம். இவர்களிடம் போய் நீங்கள் சிந்திக்க வேண்டும், அரசியலை மாற்ற வேண்டும். நீங்கள் இப்படி இருங்கள்; அப்படி செய்யுங்கள் என்றெல்லாம் நாம் சொல்ல முடியாது; சொன்னாலும் எடுபடாது;
மேலும், படிப்பறிவில்லாத, வேலை இல்லாத, எல்லாவற்றையும் பொறுப்பில்லாதோர் தொகை இங்கு அதிகம். இதில் குடிகாரர்களையும் சேர்த்தால் கணக்கு எகிறி விடும்.
படித்த, வேலை வாய்ப்புள்ள, ஏன் வசதியானவர்களிலும் யார் ஆண்டால் என்ன? என் வேலை ஆனால் போதும் என்றிருப்பவர்களே அதிகம். ஒரே இனம், மொழி,கலாசாரம், மதம் என்று எல்லா வகையிலும் ஒன்று பட்டு இருக்கும் சமுதாயத்தில் தான் மாற்றத்திற்கு வாய்ப்பு உண்டு. உடனே, சுதந்திர போராட்டத்தில் இந்தியர்கள் ஒன்றாக வில்லையா? போரின் போது ஒன்று சேரவில்லையா? என்று கேட்காதீர்கள்.
அவை அந்நிய சக்திகளுக்கு எதிரானது,வீட்டு கூரை எரியும் போது யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், நீங்கள் கூறுவது நம்மில் இருக்கும் சிலரை,நாமே உண்டாக்கியதை மாற்ற வேண்டும் என்பது. இதற்கு ஒருமித்த கருத்து உருவாவது அத்தனை எளிதல்ல. அதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். அதற்கு உண்மையான தேச பக்தி உள்ளவர்கள் வேண்டும்; இங்கு தேசபக்தி உள்ளவர்கள் நடிப்பவர்கள் தான் அதிகம். மக்களும் அவர்களை தான் ஆதரிப்பார்களே ஒழிய, உண்மையான தேசபக்தியும், மக்கள் நலனை சிந்திப்பவர்கள், தமிழ்நாட்டில் ஆதரிக்க மாட்டார்கள், உதாரணம், காமராஜர், சினிமா, சாராயம் இரண்டும் இருந்து விட்டால் போதும்; வேறு எதுவும் வேண்டாம்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நாமளும் மனசு வெச்சாதான் நடக்கும். நம்ம மேலையும் குறைய வெச்சுகிட்டு சும்மா அவனுகள போட்டு நச்ச்சரிக்கிரதுல ஒன்னும் அர்த்தமே இல்ல.

No comments:
Post a Comment