Wednesday, 27 April 2011

காங்., கூட்டணி தேவை! தி.மு.க., உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்

காங்., கூட்டணி தேவை! தி.மு.க., உயர்மட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்

கழக கண்மணிகள், சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. கட்சி பெரிதா? குடும்பம் பெரிதா? என்று பட்டி மன்றம் போடலாம். ராசாவுக்கு ஒரு நீதி, கனிமொழிக்கு ஒரு நீதியா? ராசா வுக்கு ஏன் இந்த உயர்மட்ட குழு முடிவு இல்லை?

மகள், மனைவி ஊழலிள் ஈடு பட்டுள்ளார்கள். ஆனால் அப்பா ஒன்னும் செய்யவில்லை நல்லவர். இது நாள்வரை ஆண்கள் தான் இப்படி செய்வர்கள். பொதுவாக பெண்கள் உடந்தையாக இருக்க மாட்டார்கள். ஆனல் இங்கோ தலைகீழக உள்ளது. பொண்டாட்டி, மகள் ஊழல் செய்கிரார் அப்பாவிர்கு அது தெரியாது. அதுவும் ஒரு மாநிலத்தின் முதலைமைசர்.

கொள்கை இல்லாத கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறை சென்ற பொது கூட்டப்படாத பொதுகுழு என் இப்போது மட்டும் கூட்டப்படுகிறது? இதுதான் குடும்ப அரசியல். கட்சியின் பெயரை மாற்ற வேண்டும். திராவிட முன்னேற்ற குடும்பம்.

2ஜி குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டதை அடுத்து இன்று காலையில் நடந்த தி.மு.க., உயர் மட்ட செயல் திட்ட குழு கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது என்றும், பிரச்னைக்கு சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டணி கட்சியினர் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை காப்பாற்றுவது தான் கூட்டணி தர்மம்' என்ற அடிப்படையில் தான், இதற்கு முந்தைய அரசுகள் முன்னுதாரணங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளன.

இது என்னய்யா கூட்டணி தர்மம் ? கூட்டணி போட்டது நல்லாட்சி தருவதற்கா அல்லது நாட்டை சுரண்டி, குடும்ப சொத்தை வானளவு உயர்த்திக்கொண்ட தனி நபர்களை காப்பாற்றுவதற்கா ??? சுமார் 2000 கோடியை ஆட்டைய போட்ட லாலு பிரசாதையே கழட்டி விட்ட மத்திய அரசு சுமார் இரண்டு லட்சம் கோடிகளை சுருட்டிய கும்பலுக்கு ஆதரவு தருவது நியாயமா ?

தனி நபருக்கு; இவர்களை காப்பாற்ற பொது நல கட்சியாக பதிவு செய்த திமுக என்ற சங்கர மடமா ? அப்படியானால் திமுகவில் இருக்கும் முக்கியமான நபர்கள் எல்லாம் எதோ ஒரு வகையில் நாட்டை கொள்ளை அடித்தவர்களே என்பது உறுதி ஆகிறது. ஏன் இதே உயர்நிலை கட்சியின் கூட்டத்தை ஆண்டிமுத்து ராசா கைதான சமயத்தில் கூட்ட வில்லை ? அவர் அடித்ததோ வெறும் 10 % தான்; இவர்கள் அடித்ததோ 90 % என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான விழுக்காடு விழுங்கி இருப்பார்கள்.

No comments:

Post a Comment