Saturday, 9 April 2011

ஏழைக்கு தான் போலீஸ் மற்றும் சி.பி.ஐ

31 ஆம் தேதி குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியும் ஏன் 2 ஆம் தேதி தாக்கல் செய்தார்கள் தமிழ் நாட்டின் சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்து தான் கிரிக்கெட் போட்டி நடை பெரும் இறுதி நாளில் தாக்கல் செய்து மக்களை திசை திருப்ப எண்ணி இருப்பார்கள்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இனம் காணப்பட்டுத் தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்தின்முன் நிறுத்தப்படாவிட்டால், மக்களாட்சியின் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிடும் என்பதை மத்தியப் புலன்விசாரணைத் துறை புரிந்துகொள்ள வேண்டும்!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழலையும், கார்கில் வீரர்கள் பெயரில் வீடுகட்டும் ஊழலையும் பெரிதாகப் பேசும் எதிர்க்கட்சியினர், இப்படி ஒரு சட்டத்தை முதலிலேயே சரியானபடி நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியிருந்தால், இந்தச் சட்டம் முறையாக அமலாக்கம் செய்யப்பட்டிருந்தால், இத்தனை ஊழலும் நடந்திருக்குமா?

No comments:

Post a Comment