உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை, நம் இந்தியாவுக்கு உண்டு.கடந்த, 1952ல், இந்தியா குடியரசான பின் நடந்த முதல் தேர்தலில், "மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள்' என, நிறத்தை அடையாளம் காட்டி, பிரசாரம் செய்தனர்.அதன்பின், 1957, 1962ல் நடந்த தேர்தல்களில், சின்னம் அறிமுகம் செய்யப்பட்டு, தேர்தலைப் பற்றிய தெளிவு, மக்களுக்கு ஏற்பட்டது. விருப்பமுடன் ஓட்டளிக்கத் துவங்கினர்.அதன்பின், 1967ல் நடந்த தேர்தலில், குறிப்பாக தமிழகத்தில், மிகப்பெரிய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஜனநாயகத்தின் சிறந்த வெளிப்பாடே இது. இந்திய ஜனநாயகத்திற்கு, இந்த காலகட்டங்களில், உலக அரங்கில் நன்மதிப்பு ஏற்பட்டது.ஆனால், சமீப கால தேர்தல்களில், ஜனநாயகம் கேள்விக்குறியாகி, கேலிக்கூத்தாக்கப்பட்டது. தடி எடுத்தவன் தண்டல்காரனாக, பணம் படைத்தவரே பதவி பெற, இந்த ஜனநாயகம் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள், மனம் வெதும்பிப் போயினர். டி.என்.சேஷன் போன்ற அபூர்வமான தேர்தல் கமிஷனரால், நம் ஜனநாயகம் சிறிது முன்னேற்றப் பாதைக்குத் திரும்பியது.அவர் பதவி காலத்திற்குப் பின் நடந்த தேர்தல்களில், வன்முறையும், ஓட்டுக்கு பணப் பட்டுவாடாவும், வெகுமதிகளும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, வெட்கி தலைக்குனிய வைத்தது.மக்கள் ஏக்கப் பெருமூச்சு விட்ட இந்நேரத்தில், ஆச்சர்யகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
ஆர்ப்பாட்டமில்லை, ஆரவாரமில்லை, சுவரொட்டிகள், கொடிகள், தோரணங்கள், இரைச்சல்கள் இல்லை. மக்களும் நிம்மதியாக சென்று ஓட்டளித்தனர்.
சட்டசபை தேர்தலில், வேட்பாளர்களின் விளம்பர கணக்கு உட்பட, அனைத்திற்கும் கட்டுப்பாடு விதித்த தேர்தல் கமிஷன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதையும், முடிந்த அளவுக்கு தடுத்தது பாராட்டுக்குரியது.பல அதிகாரங்களை பெற்றுள்ள தேர்தல் கமிஷனால், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளுக்கு, ஏன் கட்டுப்பாடு விதிக்க முடியவில்லை?
நாட்டின் பொருளாதாரம், தானாக சீரழியவில்லை; கொள்கையற்ற அரசியல்வாதிகளின், கொள்கையற்ற நடைமுறைகளால் தான், சீரழிவு ஏற்பட்டுள்ளது என்பதை, நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யார் வீட்டுப் பணத்தை எடுத்து, இலவசம் என்ற பெயரில் வாரி இறைக்க வேண்டும்?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அது, இது கொடுப்போம் என, தேர்தல் அறிக்கை விடுத்து, வாக்காளர்களின் மனதை கவர்ந்து, தங்கள் கட்சியின் ஓட்டு வங்கியை வலுப்படுத்த துடிக்கின்றன.தேர்தலுக்கு முன், ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு பெறுவது, குற்றமாக கருதப்படும் பட்சத்தில், இலவச அறிக்கைகள் விடுத்து ஆட்சிக்கு வந்தால், அது, இது இலவசமாக கொடுப்போம் என்பது, வாக்காளர்களை ஏமாற்றும் செயல்.
தன் ஓட்டு வங்கியை பலப்படுத்தும் அரசியல் கட்சிகளின் இந்த செயல், அநீதி என, அனைவரும் கருத வேண்டும்.இலவசங்களுக்கு பின், உலக வங்கியிடம் பிச்சை கேட்பது எதற்காக?
சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை, இன்று அற்புதமாக செயல்படுத்தி வருகிறது தேர்தல் கமிஷன். சட்டப்படி தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது, சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்கள், தேர்தல் கமிஷன் மீதும், அதிகாரிகள் மீதும் வழக்குகள் போடுவது, புகார்கள் அனுப்புவதுமாக உள்ளனர்.தமிழகத்தில் தேர்தலை நடத்துவது, மிக கடினமான செயலாகவும், பெரும் சவாலாகவுமே இருக்கிறது. இதில் வரவேற்கத்தக்க விஷயம் என்னவென்றால், கமிஷனின் உத்தரவுகளை செயல்படுத்தி வருவது, தமிழக அரசு ஊழியர்கள் தான். பொதுமக்களின் வெறுப்பை, தங்கள் நடவடிக்கைகள் மூலம் பெற்று வந்த அரசு ஊழியர்களின் இன்றைய செயல்பாடுகள், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இப்போது காரணம் தெரிகிறதா... நல்ல தலைமை, நல்லெண்ணம் கொண்டவர்கள் அதிகாரத்தில் இருந்தால், அவர்களின் எண்ணப்படியே அரசு ஊழியர்கள் செயல்பட்டு, நல்ல பெயர் எடுப்பர்

No comments:
Post a Comment