Thursday, 28 April 2011

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல..இவர்களே குற்றவாளிகளாக

தமிழர்கள் நலனிலும், இலங்கையைத் தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.
------------------பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

--------------------------------------------------------------------------------------------------

போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலையை நிகழ்த்தியதற்காக, ராஜபக்ஷே, அவருடைய ராணுவத் தளபதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் இதில் தொடர்புள்ள இதர நபர்களை, சர்வதேச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்காக நிறுத்த வேண்டும்'

------------------ஜெ., வலியுறுத்தல்

ராஜபக்ஷேயை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொல்லும் ஜெயலலிதா கஞ்சா கருப்புவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது வாழ்த்து சொல்லாதது ஏன்?
--------------------------------------------------------------------------------------------------
""மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க.,விற்கு, இலங்கை அரசை காப்பாற்றியதில் கூட்டு பொறுப்பு உண்டு என்பதை நாடறியும்,''

-----------------தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்

--------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும். இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது? தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல..

---------------------------------------------------------------------------------------------------

கதவை தொறந்த காற்று வரும், இவர்களின் வாயே தொரந்த பொய் கதை வரும். நாங்களெல்லாம் கூட்டுக் களவாணிகள், ஒன்று சேர்ந்த தமிழினத்துரோகிகள்.திமுகவுடன் இருந்து கொண்டே, எந்தவித எதிர்ப்பின்றி ஈழத்தில் தமிழர்களை அழித்து விட்டாயிற்று.

ராஜபக்ஷே கிட்ட தமிழர்களை காட்டி கொடுக்கலாம், ஆனா உங்க கட்சி (DMK) கொள்ளைய காட்டி கொடுக்காதீங்க. கனிமொழி உங்க கட்சி தொண்டர் காப்பாத்துங்க.அப்போ ராஜா உங்க கட்சி இல்லையா.நான் மட்டும் இல்லே கட்சி முழுதும் கொள்ளைதான் காட்டி கொடுக்க மாட்டேன் என்று இலைமறைவாக சொன்னீர்கள்.



இது போன்ற ஊழல்கள் இனியும் தொடராமல் இருக்க!

1 .அரசியல் சாசனம் முற்றிலும் மாற்றி அமைத்து ஊழல் செய்பவர்கள், செய்ய தூண்டுபவர்கள் தூக்கில் இட வேண்டும்
2 . இந்தியாவில் இருந்து swiss bank சென்ற எல்லா கருப்பு பணமும் இந்தியாவுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
3 . பதவிக்கு வந்தபின் அரசியல் முறைகேடுகள் செய்யும் அமைச்சர்கள் முதல்வர்கள் பிரதமர் ஆகியோரை பதவியில் இருந்து இறக்கும் அதிகாரம் பெற்ற மக்கள் மசோதா அமைக்க பட வேண்டும்.
4 . நீதியும் நேர்மையும் இந்தியா முழுவதும் நிலை நாட்ட பட வேண்டும்.


No comments:

Post a Comment