வாக்கு என்பது மலிவு விலைக்கு கிடைக்கும் கள்ளசாராயம் போல உள்ளது. தேர்தல் கமிஷனே ஒரு வேட்பாளர் 17 லட்சம் செலவு செய்து கொள்ளலாம் என அனுமதித்துள்ளது. அவ்வளவு செலவு செய்பவன் போட்ட முதலை எடுக்காமல் விடுவானா. இலவசமாக கிடைக்கும் பொருள்கள் மக்களின் வரிப்பணத்தால் கிடைக்கிறது என்ற சாதாரண அறிவு இன்னமும் நமது மக்களுக்கு புரியவில்லை. மக்களது ஏழ்மையை தங்களது சுய தேவைக்கு பயன்படுதிக்கொள்வதும், கூட அரசியல் திருட்டுதான். இலவசங்களால் நாட்டில் நடைபெறவேண்டிய நலத்திட்டங்கள் பாழாய் போகும் . ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் எது இலவசமாய் கிடைக்கும் என்ற உணர்வே வேகமாய் எழுந்து நிற்கும். இதையம் தடுக்க ஹன்னா ஹசாரி போன்ற ஒருவர் வந்தால் தான் உண்டு. தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேய அனைத்து சட்டமன்ற உறுபினர்களும் ராசினாமா செய்யவேண்டும்.அரசின் முழு பொறுப்பும் அதிகாரிகளின் கைகளுக்கு செல்லவேண்டும். தேர்தல் அறிக்கையினை வெளியிடும்போதே அரசின் வருவாயிலிருந்து இலவசங்கள் தடுப்பதற்கான ஒப்புதலை ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் அதிகாரிகளின் குழவின் ஒப்புதலுடன் தேர்தல் அறிக்கையினை வெளியிடவேண்டும். இதில் வருவாய்க்கான வழி மற்றும் செலவினதிற்கான வழி காணபட்டிருக்கவேண்டும். இவ்வறிக்கைகள் முன் கூட்டியே அரசியல் கட்சிகளால் தரப்பட்டு அவை ஆய்வு செய்த பின்பே அனுமதிக்கப்படவேண்டும். அரசியல் என்பது ஒரு புனிதமானதுதான். அரசியல் வாதிகள் தான் அதை சாக்கடையாக்கி கொண்டிருக்கிறார்கள்.நல்ல கல்வி அறிவு கொண்ட மக்கள் இருந்தால் தான் வளமான நாடும் நல்ல பொருளாதாரமும் கிடைக்கும். அரசியல் வாதிகள் அதிகாரத்தில் குறுக்கிட்டால் எல்லாம் பாழ்தான் என்று உணரவேண்டும்.. எத்தனை தலைவர்கள் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் சுய நலமில்லாத தொலைநோக்கு சிந்தனை உள்ள நல்ல .தலைவர்களை தான் நாடு விரும்புகிறது...மீண்டும் ஒரு காந்தி பிறப்பாரா .....
அலர வைக்கும் அரசியல் அசிங்கத்தின் நடுவே, கோவையின் வீதிகலில் அமைதியாய் நடந்தேரும் தேர்தல் அதிசயம். சுயேட்சை வேட்பாளர் ஒருவர், அமெரிக்க மோகத்திற்கு விடை கொடுத்துவிட்டு அமைதியாய், ஆர்பாட்டமின்றி ஒரு இளைஞர் கூட்ட்ம் ஒட்டு கேட்டு வீடு வீடாய் வருகிறார்கள். மக்களிடம் அமோக வரவெற்பு வேறு. கவனிக்க வேண்டிய முன்னுதாரணம் இது. இப்படியும் பிரச்சாரம் செய்யலாம் என்பதற்கு முன்னுதாரணம்....
தனக்கு, "சகாயம்' ஏதும் செய்ய மறுப்பதால், அவர் மீது அடுக்கடுக்கான, பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, அவரை எப்படியாவது மதுரையிலிருந்து விரட்டியடிக்க, பகீரத முயற்சிகள் செய்து வருகிறார், மத்திய அமைச்சர் அழகிரி.தேர்தல் கமிஷனோ, "கலெக்டர் சகாயம், மிகவும் நியாயமாக நடந்திருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க, எந்த காரணமும் இல்லை' என, அதிரடியாய் அறிவித்து விட்டது.இதை அறிந்த முதல்வர் கருணாநிதி, தங்கபாலு, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர், தேர்தல் கமிஷனையும், கலெக்டரையும், திட்டித் தீர்த்து விட்டனர்."தாசில்தாரை தாக்கிய அழகிரி மீதும், மதுரை மாநகர துணை மேயர் மீதும், நடவடிக்கை எடுங்கள்' என, வருவாய் துறை ஊழியர்கள் போர்க்கொடி தூக்கினர். அடிபட்ட தாசில்தாரை வைத்தே, கலெக்டர் மீது குறை சொல்ல வைத்து விட்டார் அழகிரி. இதனால் தான், மதுரை அரசு அதிகாரிகள், நேர்மையாக செயல்பட பயப்படுகின்றனர்."நெற்றிக் கண்ணை காட்டினாலும், குற்றம் குற்றமே' என, துணிந்து செயல்படுகிறார் கலெக்டர் சகாயம்.
No comments:
Post a Comment