கோவாவில் மதுவை விட பெண்கள் மலிவு, என்ற வசனம் இடம்பெற்றுள்ளதால் தம் மரோ தம் இந்திப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது.
அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு உள்ளிட்டோர் நடித்து, ரோகன் சிப்பி இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் தம் மரோ தம்.
இந்தப் படத்தின் ஒரு காட்சியில், கோவாவில் மதுவை விட பெண்கள் மலிவாகக் கிடைப்பார்கள் என்று வசனம் வைக்கப்பட்டுள்ளது. இந்த வசனத்தை பிபாஷா பாசு பேசுவது போல வசனம் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர்களிலும் அது இடம்பெற்றுள்ளது.
இது பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. கோவாவின் அரசியல்வாதிகள், சமூக ஆர்வர்கள் என அனைவரும் கொதித்துப் போய் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவா என்ற அழகிய நகரின் இமேஜைக் கெடுக்கும் வகையில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. அதை நீக்காவிட்டால், வெளியாக விடமாட்டோம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவசேனா கட்சியின் கோவா தலைவர் பிலிப் டிசூஸா கூறுகையில், ''இதே போல ஒரு காட்சியை வேறு எந்த மாநிலத்திலாவது போய் எடுத்திருந்தால் சும்மா இருந்திருப்பார்களா... கோவாவை இழிவுபடுத்துவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இனி கோவாவில் படமெடுக்க வருபவர்கள், முதலில் படத்தின் கதை, திரைக்கதையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்," என்றார்.
தம் மரோ தம் விவகாரம் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக கோவா முதல்வர் திகம்பர் காமத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தடை செய்வது குறித்து மும்பை உயர்நீதி மன்றத்தை அணுக அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

No comments:
Post a Comment