Sunday, 10 April 2011

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா புறப்படும்போது, அவரது சேவையை நினைவுகூர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், காந்தியின் மனைவி கஸ்தூரிபா அம்மையாருக்கு சில நகைகளைப் பரிசாக அளிக்கின்றனர். அந்த நகைகளைப் பொதுக்கணக்குக்கு நன்கொடையாக அளித்து விடு என்று மனைவிக்குச் சொல்கிறார் காந்திஜி.கஸ்தூரிபா மறுக்கிறார். ""இவை எனக்காக அளிக்கப்பட்ட நகைகள்; உங்களுக்கானது அல்ல. இதைத் தர மாட்டேன்''.ஆனாலும் காந்திஜி சொல்கிறார். ""கஸ்தூரிபா என்பதற்காக அளிக்கப்பட்ட நகைகள் அல்ல அவை. அவர்களுக்கு உதவிகள் செய்த என்பொருட்டு உனக்கு அளிக்கப்பட்ட பரிசு. அவை உனக்கானவை அல்ல'' என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பறித்து பொதுக்கணக்கில் சேர்க்கிறார்.

No comments:

Post a Comment