ஜெர்மனியில் உள்ள உணவுகள் குறித்த ஆய்வுக்கழகம் வீணான மற்றும் விஷத்தன்மை உள்ள உணவுகளை உடனடியாக அடையாளம் காட்டும் புதிய பேக்கேஜிங் பிலிம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர். புதிய கண்டுபிடிப்பு நிற மாற்றம் மூலம் உணவின் தன்மையை உணர்த்தும்.
இதன் மூலம் புட் பாய்சன் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும். உணவில் உடலுக்கு தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் போது அதன் விஷத்தன்மை அதிகரிக்கும். இந்நிலையில் அந்த உணவை உட்கொள்பவர்கள் ஒவ்வாமை எனப்படும் புட் பாய்சனிங் பாதிப்புக்கு ஆட்பட நேரிடும். இது பாதிப்பாளர்களை மிகப்பெரிய அளவில் அவதிக்கு உள்ளாக்கும்.
உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். கவனிக்கப்படாமல் விடும் போது பாதிப்பாளர்களை ஆபத்துக் கட்டத்துக்கு தள்ளிவிடும். இந்நிலையில் இந்த பாதிப்பில் இருந்து மனித குலத்தை காக்கும் பொருட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஜெர்மனியில் உள்ள மாட்யுலார் சாலிட் ஸ்டேட் டெக்னாலஜிஸ் மற்றும் ஃப்ரான்ஹோஃபர் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இது குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு புதிய பேக்கேஜிங் பிலிம்.
குறிப்பாக இறைச்சி மற்றும் மீன்கள் உண்பதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்பதை இந்த பிலிம்களைக் கொண்டு பரிசோதிக்கும் போது அவை நல்ல நிலையில் உள்ள உணவை மஞ்சள் நிறத்திலும் கெட்டுப்போன அல்லது விஷத்தன்மை உள்ள உணவுகளை நீல நிறத்திலும் அடையாளம் காட்டும்.
இதன் மூலம் இவற்றின் உபயோகம் குறித்து முடிவு செய்ய முடியும். ஒரு சில நொடிகளிலேயே உணவின் தன்மையை அறிந்து கொள்ள உதவும் இந்த ப்ரத்யேக ஃபிலிம் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இறுதிக்கட்ட ஒப்புதலை அடுத்து விரைவில் அமல் படுத்தப்பட உள்ளது உணவின் தன்மையை உடனடியாக தெரிவிக்கும் புதிய பேக்கேஜிங் பிலிம். அறிமுகத்துக்குப் பின் மக்களின் தேவையறிந்து இதில் மாற்றங்கள் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி குறித்த படம் பார்க்க.....
http://www.thedipaar...ws.php?id=27529
No comments:
Post a Comment