Thursday, 15 September 2011

மோடிக்கு அமெரிக்கா பாராட்டு (U.S. report lauds Modi)

அட, தேர்தல் பிரசாரத்தில் இலவச டிவி என்று சொன்ன காங்கிரஸ், மின்சார பாக்கியை வசூல் செய்வேன் என்று சொன்ன மோடி - இதில் எது பெட்டெர் என்று தேர்ந்தெடுத்த மக்கள், குஜராத் மக்கள் - நாம அப்படியா. மக்கள் எண்ணம் மாறினால் தான், தலைவர்கள் ஒழுங்காக கடமையை செய்வார்கள். அமெரிக்காவின் பாராட்டு யாருக்கு தேவை. சொன்னாலும் சொல்லாவிட்டாலும், மோடி இஸ் தி பெஸ்ட்.இந்தியாவை பொறுத்தவரை, திறமையான நிர்வாகத்துக்கும், அபாரமான வளர்ச்சிக்கும், நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு, சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறது' என, அமெரிக்கா பாராட்டியுள்ளது. அமெரிக்க பார்லிமென்ட் ஆய்வுக்கு குழு (சி.ஆர்.எஸ்.,) அந்த நாட்டின் எம்.பி.,க்களுக்காக, இந்தியாவின் முக்கிய விஷயங்களை விளக்கும் அறிக்கையை தயாரித்துள்ளது. 94 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியும், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளும், வெகுவாக பாராட்டப்பட்டுள்ளன. 

In English:
Gujarat as perhaps the best example of effective governance and impressive development in India, a congressional report has showered praise on Chief Minister Narendra Modi, saying the State, under him, has become a key driver of national economic growth. The 94-page report was released by the CRS for U.S. lawmakers on September 1, a copy of which was made public by the Federation of American Scientists. 

After Gujarat, the report mentions Bihar as a model of good governance and says such examples may have inspired Uttar Pradesh Chief Minister Mayawati to turn her focus on infrastructure and energy development in her State.

இந்த மாதிரி முதல்வர்கள் நம்ம எல்லா மாநிலத்திலும் இருந்தாக்க போதும்..நம்ம நாடு எப்பவோ வல்லரசாகி இருக்கும்.. கையாலாகாத காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து நாட்டை இவரை போன்ற துடிப்பான தொலை நோக்கு சிந்தனை உள்ளவர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். பிரதமர் ஆகக்கூடிய தகுதி இவருக்கு நூறு சதவிகிதம் உள்ளது. அனைத்து இளைஞர்களும் இவருக்கு ஆதரவு தர வேண்டும்.இந்தியாவின் இரும்பு மனிதர், தலைவர்.

நிர்வாக திறமை உள்ள எவரையும் நாம் மதிப்பதில்லை. அதில் மோடிக்கும் லாலு வுக்கும் வித்யாசம் பார்ப்பதில்லை. பல அரசு சம்பந்தப்பட்ட துறைகள் ஆமை வேகத்தில்த்தான் வேலை செய்கின்றன. நஷ்டத்தில் ஓடிய இந்திய ரயில்வேயை லாபத்தில் ஒட்டியதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மேதாவி பல்கலை கழகங்கள் கூட ஆராய்ந்து பார்த்து வியந்தன. நமக்கோ அவர் பெரிய ஊழல் வாதியாகவே தெரிந்தார். மற்றவர்கள் அந்த பதவிக்கு வரும் பொழுது திரும்பவும் அந்த துறை ஆமை வேகத்தில் நகர்கிறது - சில வருடங்களில் ரயில்வே நஷ்டத்தில் ஓடும் என்பது நிச்சயம். இந்தியா முன்னேற லாலு, மோடி போன்ற திறமையான நிர்வாகிகள் வேண்டும். இவர்களை எல்லாம் சரியான முறையில் நாடு பயன்படுத்த நமது நாட்டின் இரட்டை ஆட்சி முறை ஒரு பெரிய சவாலாகவே உள்ளது (ஜனாதிபதி மற்றும் பிரதமர்). கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்து மக்களின் ஆதிக்கத்துக்கு நாடு வர வேண்டும். பல நாடுகள் திறமை மிக்க தலைவரை வைத்தே மிளிர்கின்றன - கட்சிக்களை வைத்து அல்ல. வளர்ந்த நாடுகளில் பெரும்பான்மையான கட்சிகள் கூட நம்மூர் கட்சிகள் போல் இல்லாமல் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உழைக்கின்றன. நமது பாராளுமன்ற முறை கட்சிக்களின் ஜனநாயக முறை - நாட்டுக்கு அல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் நம்மை ஆள வேண்டும் - அரசியல் கட்சியோ அல்லது கட்சித்தலைவரோ தேர்ந்தெடுத்த ஒருவரால் கட்சிக்குதான் விசுவாசமாக இருக்க முடியும் - நாட்டுக்கு அல்ல.

மோடி ஒரு சூப்பர் முதல்வர். ஆனால் நம் ஊடகங்கள் அவரை ஒழிக்க பார்த்தன. சும்மா அவரை மதவாதி என்று போட்டு தாக்கியதில் அவர் பெயர் கெட்டது உண்மை. ஆனால், அவர் மீது தனிப்பட்ட முறையில் ஊழல் கிட்டியது. அவர் ஆட்சியில் குஜராத் அபார வளர்ச்சி கண்டுள்ளது. அவரும் தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வர் ஆகி உள்ளவர். ஒரு திறமையான மனிதர் முன்னுக்கு வருவது என்றுமே சந்தோசம். தமிழ் நாட்டில் 40 வருடமாக சினிமா பாட்டு பாடியே இருந்து விட்டோம்.

No comments:

Post a Comment