Sunday, 11 September 2011

வழக்கு செலவிற்கு தலைமையை எதிர்பார்க்கக் கூடாது கருணாநிதி

முத்தமிழ் முகுந்தா, கோபாலபுரத்து கோபாலா, மஞ்சத்துண்டு மாதவா, திருக்குவளை திருமாலே, அறிவாலயத்து பல்பொருளே, நாடாண்ட நாராயணா, பகுத்தறிவுப் பரந்தாமா, அழகிரியின் அச்சுதா, கட்சியில காசு இல்ல, பிச்சை போடு , அய்யாவுக்கு நல்ல காலம் வருது , இந்த ஏழைக்கு பழைய துணி கந்தல் கிழிசல் எதுனாச்சும் போடு சாமி, நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது. பிச்சை போடு சாமி பகுத்தறிவு புண்ணியம் வரும்.

தலைவர் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார் யாரவது நிதி உதவி செய்யுங்கள் வக்கீலுக்கு பணம் கொடுக்க காசில்லை. வாழும் வள்ளுவமே, இப்போது தடுமாறும் தொல்காப்பியமே, பொதுத் தேர்தலை சந்தித்ததால் கட்சி ஏழ்மை அடைந்துவிட்டது என்றால் தேர்தலில் கட்சி இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செலவம் அனைத்தும் செலவிடப்பட்டதாகத்தானே அர்த்தம். அவ்வளவு செலவிட்டதை தேர்தல் செலவு கணக்கில் காட்டி இருக்கிறோமா? அல்லது ஆட்சியை இழந்ததால் கட்சி ஏழ்மை அடைந்து விட்டதா? அப்படி என்றால், கட்சி அரியணையில் இருந்தால் ஏழ்மை வராத அளவுக்கு கருவூலம் கட்சிக்கும் நிரம்பி வழியும் என்றுதானே பொருளாகின்றது? கனிமேகலை வடித்த கலைஞர் பொருள் கூறுவார் என்றே நினைக்கிறேன்.

எப்படி, பத்து வருடங்கள் தமிழகத்தை மீளா கடனில் தள்ளி விட்டுவிட்டு, எங்கெங்கு திரும்பிய திசைகளில் எல்லாம் ஊழல், மோசடி என்று முதல்வர் முதல் தொண்டர் வரை ஜெயிலுக்கு போய் கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர்களது வழக்கிற்கு கட்சி பணம் கிடைக்காது என்று தலைவர் அறிவிப்பு. அவர்களது குடும்பம் அனைத்து பணமும் பத்திரமாக ஒளித்து வைத்தாகி விட்டது. இன்னும் ஏண்டா கட்சி கட்சி என்று பிசைகாரர்களாக அலைகிறீர்கள். உழைத்து பிழைக்க வக்கில்லையா? அல்லது மனசில்லையா?

மக்கள், மகள், மகன் ஏதும் தேவையில்லை . என் பணத்தை மட்டும் பாதுகாத்தால் போதும். இதேதான் சன் டிவி க்கு எதிராக அரசு கேபிள் திமுக கொண்டுவந்த போதும் நடந்தது. எனக்குப் பணம் தரவில்லைஎன்றால் என் உயிருக்குயிரான மாறன் குடும்பமானாலும் கெடுக்காமல் விடமாட்டேன். என்னிடம் யாரும் பணம் எதிர்பார்க்காதீர்கள் எனக்குத்த்தான் எல்லோரும் தர வேண்டும். 

கொள்ளையட்டிப்பது இவர்கள், இவர்களுக்க வாதிட போகும் வக்கீல்களுக்கு பீஸ் இல்லையம். தர்மத்துக்கு வாதிடவேண்டுமம். இத்தனை நிலங்களை கொள்ளையடித்து இவர்கள், பீஸ் கொடுக்க மட்டும் வசதியிலைஎன்றல் இதை யார் தான் நம்புவர்கள். சட்டம் படித்த வக்கீல்கள் கட்சி காரர்கள் என்றால் இவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் எல்லாம் இருக்கிறது இது தலைமைக்கு தெரியாத அல்லது தெரியாத மாதிரி தலைமை நடிகின்றத 

No comments:

Post a Comment