நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்கள் எல்லாம் இந்த சபையில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால், அந்த ஊழலை அம்பலப்படுத்திய பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் இருவர் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் சேவை செய்துள்ள அவர்களின் செயல் கிரிமினல் குற்றம் என்றால், அவர்களுக்கு அனுமதியளித்த நானும் குற்றவாளியே. என்னையும் கைது செய்யுங்கள்,'' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ஆவேசமாக பேசினார்.
திரு அத்வானி உணர்ச்சி வயப்பட்டு பேசினாலும் அவர் கூறியது அனைத்தும் உண்மையே.....அரசாங்கத்தை நடத்தவே லஞ்சம் தர வேண்டிய சூழ்நிலையில் தான் இந்தியா உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதில் வேடிக்கை காங்கிரஸ் தரப்பில் இருந்து ஆளும் மத்திய அரசை காப்பாற்ற யாருமே முயலவில்லையா? அவர்கள் யாரும் அமர்சிங்கை தொடர்பு கொள்ளவே இல்லையா? காங்கிரஸ்ன் கட்டளையில்லாமல் அமர்சிங் சுயமாக முடிவு எடுத்து உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தாரா? அப்படி என்றால் அமர்சிங் மத்திய அரசை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?மத்திய அரசுக்கும் அமர்சிங்க்கும் என்ன தொடர்பு? மாற்று கட்சியை சேர்ந்தவர் மத்திய அரசை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் என்ன? அதை அவர் பிரதிபலன் ஏதுமின்றியா செய்தார்? அப்படி பலன் அடைந்தார் என்றால் அந்த பலனை கொடுத்தது காங்கிரஸ் ஆக தானே இருக்க வேண்டும். அந்த பலனின் பின்னணி என்ன? அதை எவ்வாறு அடைந்தார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை....ஒரு வேளை இதையும் உச்சநீதிமன்றம் கேட்டால் தான் மத்திய அரசு பதில் தருமோ என்னவோ? உண்மையை வெளிபடுதவேண்டிய பொறுப்பு அமர்சிங் டம் தான் உள்ளது.உண்மையை மறைத்தவரும் சிறையில். அதை வெளி கொண்டு வந்த எம்.பிக்களும் சிறையில். அதனால் பயன் அடைந்தவர்கள் பாராளுமன்றத்தில் பவனி வருகிறார்கள். இது தான் ஜனநாயகம்......காங்கிரஸ் ஆட்சியில் நேர்மை உறங்கி கொண்டு இருக்கிறது .சத்தியத்திற்கு இவர்களால் சோதனை வந்துள்ளது. பாரதமாதாவின் கண்கள் கட்டப்பட்டு உள்ளது.இந்த ஆட்சியையும் காங்கிரஸ்ம் போனால் தான் இந்தியா மீட்கப்படும். .நாட்டின் மேல் அக்கறை கொண்டவர்களும்,தேச பக்தி கொண்டவர்களையும், நீதி,நேர்மை கொண்டவர்களையும் மத்திய அரசு அடக்கு முறைகளை ஏவி கொண்டு இருப்பதை தான் தன் ஆட்சியின் குறைந்த பட்ச செயல் திட்டமாகவும்,கட்சியின் எழுதபடாத கொள்கையாகவும் கொண்டு உள்ளது.
No comments:
Post a Comment