Thursday, 1 December 2011

அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தி.மு.க

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதி முடிவை வாபஸ் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகளும், "முடிவை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை' என, மத்திய அரசும் பிடிவாதமாக உள்ளன. பார்லிமென்ட் நடைபெறாமல் இருப்பதால், முக்கிய அலுவல்கள் முடங்கி, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்ட பின், காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூடியது. காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர். 

இப்போவா தெரிஞ்சது? இது? எப்போ அண்ணா நாமம், அண்ணா நாமம் வாழ்கன்னு பெரியார் நாமம், பெரியார் நாமம் வாழ்கன்னு உங்களுக்கு எல்லாம் பெரிய பட்ட நாமம் இந்த நாப்பது வருசமா போட்டு கோடான கோடிகளை திருடி கொள்ளை அடிச்சு ,தன குடும்பத்திற்கு இன்னும் நூறு வருஷ பரம்பரைக்கே சொத்து சம்பாதிச்சாசோ?

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து, லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானமோ, ஓட்டெடுப்போ வந்தால், அப்போது அது பற்றி முடிவு செய்வோம்,என்று,இங்கே, மு க கூறி விட்டு ,நேற்றே பிரதமிரிடம்,ஆதரித்து ஒட்டு போடுவோம்,என்றும் கூறியுள்ளார்.இரட்டை வேடம்.இரட்டை நாக்கு.

No comments:

Post a Comment