Thursday, 1 December 2011

ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டதால் என்ன ஆச்சு? விஜயகாந்த் ஆவேசம்

விஜயகாந்த் ஒரு கோமாளி அரசியல் வாதி. ஆறு மாதம் முன் அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன அரசியல்வாதி இவர்தான். இப்ப ஒரு கட்சிக்கு போட கூடாது என்று சொல்லுவதும் இவர்தான். இவர் கருணாநிதி குடும்ப அரசியல் பற்றி பேசுவார், ஆனால், இவர் மச்சான் மனைவிதான் கட்சியில் முக்கிய பிரமுகர்கள். இவர் சட்டம் ஒழுங்கை பற்றி பேசுவார். ஆனால், இவர் பையனுக்கு காலேஜ்ல இடம் கிடைக்கலேன்னு கல்லுரி முதல்வரை மிரட்டியவர். உள்ளாட்சி தேர்தலில் இவருக்கு நிறைய இடம் கிடைக்கும்னு பம்மினார். இவர் ஒரு காகிதப்புலி என்று மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து விட்டார். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ ஒரு சில கொள்கைகளில் உறுதியாக இருக்கிறார்கள். விஜயகாந்த் பதவிக்கு வர எப்படி வேண்டுமென்றாலும் கொள்கையை மாற்றுவார். இவருக்கு கொள்கை என்ற புண்ணாகும் கிடையாது. இவரின் ஒரே பலம், பண்ருட்டி தான். பண்ருட்டி சரியாக வழி போட்டு கொடுத்த காரணத்தால் இவர் அரசியல் வாழ்கை ஓடுகிறது. இல்லை என்றால் திண்டாட்டம்தான். 

உன்னோட கட்சி மாவீரர் தினம் அனுசரித்தது உண்டா? முல்லை பெரியாருக்கு போராட்டம் நடத்தினது உண்டா? கேப்டன் பிரபாகரன் படத்தின் முலம வாழ்ந்து கொண்டு, இப்போ இந்த இலங்கை பிரச்சினைல உன்னோட நிலைமை என்ன?

No comments:

Post a Comment