Thursday, 1 December 2011

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்: கருணாநிதி

பொறுமையா இருக்க வேண்டிய விஷயமா இது. தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம். எதுல பொறுமையா இருக்கோணும்னு ஒரு விவஸ்தை இல்ல.

சுப்ரமணிய சுவாமி, ஒரு கேரளா எம்.பீ. மற்றும் தி.மு.கா. எம்.பீ. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். 2006 உச்ச நீதி மன்றம் இந்த விஷயத்தில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியும் அப்போதைய தி.மு.கா அரசு அதை செயபடுத்த வில்லை என சுவாமி அவர்கள் குற்றம் சாட்டினார். தி.மு.காவினர் கேரளா ரியல் எஸ்டேட் விஷயத்தில் சமரசம் செய்து கொண்டு வழக்கம் போல தமிழகத்துக்கு துரோகம் இழைத்ததாக குற்றம் சாட்டினார். இளங்கோவன் அவர்கள் அதுக்கு பதில் கொடுக்கவே இல்லை. அவரது தொடர்பு துண்டிக்கப் பட்ட மாதிரி நடித்து (தலைவரி போல நன்றாக நடிக்கிறார்) அந்த நிகழ்ச்சி முடியும் வரை வரவே இல்லை. கேரள எம்.பீ. எழுப்பிய மடத்தனமான கேள்விகளுக்கு சுவாமி நல்ல பதில் கொடுத்தார். உச்ச நீதிமன்ற நிபுணர் குழு இன்றைக்கு கேரளா கேட்கும் அனைத்து கேள்விகளையும் பரீசீலித்து விட்டது. நிபுணர் குழுவை விட உங்களுக்கு அணைகளை பத்தி தெரியுமா என சுவாமி கேட்ட கேள்விக்கு அந்த கேரள எம்.பீ. பதில் கொடுக்க முடிய வில்லை. கலைஞர் அமைதியாய் இருக்க சொல்லுவதன் காரணம், அவர் இந்த விஷயத்திலும் ஏதோ உள்குத்து செய்துள்ளார் என அர்த்தம்.

ஆதாயமில்லாமல் "யாரோ" ஆற்றோடு போகமாட்டார்கள் என்று சொல்லுவார்கள்..! அந்த "யாரோ" யாரென்று தெரியாதவர்களுக்கு..அந்த "யாரோ" இவரே...சாட்சாத்..இவரே..! காவிரி நதி நீர் பிரச்சினையில் தொடர்ந்து "அடக்கி" வாசிக்க காரணமே..இவரது மகளுக்கும்..இவரது குடும்ப தொலைக்காட்சிக்கும் ஏகப்பட்ட "தொழில்" முதலீடுகள் அங்கே இருந்த காரணத்தால் காவிரியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.!  இன்றைக்கு காவிரி பிரச்சினை நமக்கு எதிராக செல்ல முடியாமல் கர்நாடகா அரசாங்கம் அடக்கி வாசிக்கின்றது.! முல்லை பெரியாறு பிரச்சினையில் ஏதோ மகாத்மா ரேஞ்சுக்கு பில்டப் விடுவதெல்லாம் இவரது "வியாபார" தந்திரமே அன்றி வேறு இல்லை..!! ஆதாயமில்லாமல் இவருக்கு அறிக்கை விடவே பிடிக்காது.! என்னமோ இவரிடம் தமிழக மக்கள் வந்து இவரது அபிப்ப்ராயத்தை கேட்டது போலவும் இவர் தன்னை புத்தராக..மகாத்மாவாக..நினைத்துகொண்டு "சாத்வீகமாக" அறிவுரை கூறுகின்றார்.!

No comments:

Post a Comment