வெள்ளையர்கள் இங்கு நுழைந்தபோது முதலில் நாசம் செய்தது நம் உள்ளூர் கைத்தொழிலை! அதனை மீண்டும் அரங்கேற்றப் போகிறார்கள்!நமது உள்ளூர் குளிர்பானங்களான தமஸ் அப், காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் என்னாச்சு? இந்த கோக், பெப்சியையும் அனுமதித்தவுடனே உள்ளூர் பிரண்டுகளை கபளீகரம் செய்து, ஒழித்தனர் இந்த பன்னாட்டு நிறுவனங்கள்!அதே நிலை மற்ற சிறு வணிகர்களுக்கும் ஏற்படுவது உறுதி! தமது பண பலத்தால் அரசியல்வியாதிகளை மிரட்டி, தமகேற்றாற்போல் வணிக, தொழிலாளர் சட்டங்களை மாற்றி,அதனை வைத்தே சிறு நிறுவனங்களை அழிக்கப்போவது நிச்சயம்!அவை நுழைந்தவுடன் அவர்கள் செய்யும் தவறுகளை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளமாட்டார்! இளைஞர்கள் சொந்தமாக சட்டப்படி சிறிய அளவில் சொந்த வணிகம் துவங்குவதே கனவாகிவிடும்!நம் ஊர் வணிகர்கள் சில அநியாய வேலைகளில் ஈடுபடுவது உண்மைதான், அதனை தட்டிக் கேட்டு சீர்திருத்தவேண்டியது அரசின் கடமை!அதற்கு இந்த பன்னாட்டு அனுமதிப்பது மருந்தல்ல!அது தலை அரிப்புக்கு கொள்ளிக்கட்டையை வைத்து சொரிதல் போலாகும். நூறாண்டுகள் கஷ்டப்பட்டு வெள்ளையனை வெளியேற்றினோம்! இப்போது வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது, காங்கிரஸ்
இந்தியாவின் சில்லரை வர்த்தக மதிப்பு நானூறு கோடி பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது.இது வால் மார்ட் மற்றும் டெஸ்கோ போன்ற அமெரிக்க வர்த்தக நிறுவனங்களின் பார்வையில் இது சாதாரண விஷயம் அல்ல.ஆகவேதான் அவர்கள் இந்திய சந்தையை கைப்பற்ற துடிகின்றனர்.இப்போது இந்தியாவில் சில்லரை வர்த்தகம் என்பது ஒரு ஒருகிணைக்கப்படாத நிலையில் உள்ளது.இந்தியாவில் உள்ள ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் ரெட் டேபிசம் போன்றவைகளால் அந்நிய வியாபார முதலைகளுக்கு இந்திய சந்தை என்பது அல்வா சாப்பிடுவதைப்போல.மிகவும் எளிதாக விழுங்கிவிடுவார்கள்.ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளை சுரண்டி சாப்பிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்தியாவை கபாளீகரம் செய்ய துடிக்கின்றன.இதை ஒரு போதும் அனுமதிக்க கூடாது.ஒரு சூப்பர் மார்க்கட் தொடங்கப்படும் பொது சுமார் ஐநூறு சிறு வியாபாரிகள் தம் தொழிலை இழப்பார்கள்.அந்த முதலாளியும் அங்கு வேலை செய்த தொழிலாளியும் ரோட்டில் நிற்பார்கள்.அந்நிய நிறுவனகள் படிப்படியாக நம் நாட்டு உற்பத்தி பொருள்களை விற்பதை நிறுத்துவார்கள்,வாங்கும் ஒரு சில பொருள்களுக்கும் விலையை அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள்.இப்படி பல சிக்கல்கள் நம் நாட்டில் ஏற்ப்படும்.இப்படி பட்ட சிக்கல்கள் இங்கிலாந்தில் இன்று ஏற்பட்டு உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் சிலரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது மோசமான செயல்.
இங்கு வந்த எந்த அந்நியன் நன்மை செய்திருக்கிறான்? எல்லாம் நம்மைக் கொள்ளையடிக்க அடிமைப்படுத்ததானே வந்தான்? முன்பு மிக கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்தனர்! இப்போதோ வழியை சுலபமாக்கிவிட்டனர்!
No comments:
Post a Comment