Thursday, 1 December 2011

இழந்ததை மீட்போம்! இருப்பதை காப்போம்

முகலாயர்களும், வெல்லைகரர்களும் பெண்களையும், போதை பொருட்களையும் அன்றைய அரசர்களிடம் காட்டி, மையகி நம் நாட்டை பிடித்தார்கள். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களிடம் எதை காட்டி மயகினார்கள் என்று தெரியவில்லை. பண்டைய வரலாற்றில் நம் முன்னோர்கள் கடல் தாண்டி வணிகம் செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. ஏன் இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டை சேர்த்தவர்கள் வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டில் கிடைக்காத பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்யகூடாது? அந்த வியாபாரத்தில் கிடைக்க கூடிய இலாபத்தை ஒவ்வொரு இந்தியனும் பெற கூடாது ?....... இப்படியாக ஒவ்வொன்றாக விட்டு கொடுத்தால் கடைசியில் மிஞ்சுவது ஏழ்மையும், தாழ்மையும் தான்.... ஒரு இந்திய தேசத்தை சேர்ந்தவன் 51 சதவீதம் அந்நிய பொருட்களை நம் நாட்டுக்கு இறக்குமதி செய்து அந்த வியாபாரத்தில் அரசாங்கத்துக்கு வரி கட்டினால் அதை அரசாங்கம் ஏற்றுகொல்லதா?

கனி பெயிலில் சிக்கல் என்று தெரிந்த போது தீவிரமாக இந்த திட்டத்தை எதிர்த்த திமுக, கனி விடுதலைக்கு விலையாக அதரவு கை நீட்டுகின்றனர். இவர்களுக்கு என்ன அந்நிய முதலீடோடு அவங்க குடும்படி.வி.மற்றும் வால்மார்ட் உடன் சேர்ந்து பல் பொருள் அங்காடியை திறக்கலாம் .
இந்தியாவில் ஜனநாயகம் ஒரு சடங்கு. இறந்துப்போன மக்கள்ளாட்சி என்ற சவத்தை குளிரூட்டி பாதுக்கக்கிறது காங்கிரஸ். உள்நாட்டு வாணிப சுதந்திரத்தையும், பாரம்பரிய விவசாயத்தையும், மக்களின் நலத்தையும் அன்னிய நாட்டவனின் கால்களில் சமர்பிக்க நேரம் பார்த்து விட்டது காங்கிரஸ் கட்சி சில்லரைத்தனம். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கான அவசியம் இப்பொழுது ஏன்.... கருப்பை வெள்ளையாகுவதர்கே?


No comments:

Post a Comment