லிபிய அதிபர் கடாபி இன்று சர்வதேச படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்துள்ளார்.
லிபியாவை பல ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபி மீது மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவாக அங்கு பெரும் புரட்சி வெடித்தது. லிபிய மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்து போராட்டத்தில் குதித்தன. இந்நிலையில், கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபிய நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிய வண்ணம் இருந்தனர். அதேசமயத்தில், கடாபியின் உறவினர்கள் அவ்வப்போது கொல்லப்பட்டு வந்தனர். ஆனால், கடாபி மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்கும் முயற்சியில், நேட்டோ உள்ளிட்ட சர்வதேச படைகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றில், காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். பின், அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார். இந்த தகவலை லிபியா லில் ஹரார் டிவி உறுதி செய்துள்ளது.'
In English:
Former Libyan leader Muammar Qaddafi, covered in blood, is held on a truck by NTC fighters in Sirte in this still image taken from video footage October 20, 2011. Gaddafi was killed on Thursday as Libya's new leaders declared they had overrun the last bastion of his long rule, sparking wild celebrations that eight months of war may finally be over.
A fighter from the National Transitional Council (NTC) told BBC that Qaddafi cried for mercy as the forces advanced menacingly. "Don't shoot," he pleaded while hiding in a hole.






No comments:
Post a Comment