தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில், இப்போது பெரும் கவலை கனிமொழிக்கு பெயில் கிடைக்குமா என்பதுதான். டில்லி பாட்டியாலா கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார் கனிமொழி. "இந்த ஜாமின் மனுவை சி.பி.ஐ., எதிர்க்காது' என செய்தி வெளியானது.
கருணாநிதி மகிழ்ச்சியடைந்தார்.
இந்த மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது?
காரணம் சுப்ரீம் கோர்ட் எழுப்பியுள்ள கேள்விகள். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல கம்பெனி அதிகாரிகள், ஜாமின் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது, நீதிபதி, ஒரு முக்கிய நபரை ஜாமினில் வெளியே விட சி.பி.ஐ.,க்கு ஆட்சேபனை இல்லை என செய்தி வந்துள்ளதே, இது எந்த அளவிற்கு உண்மை என கேள்வி எழுப்பினார். உடனே சி.பி.ஐ., வழக்கறிஞர், "இது தவறான செய்தி, இதில் உண்மை கிடையாது' என பதில் அளித்தார். நீதிபதியும் விடவில்லை, "இது தவறான செய்தியாக இருந்தால் ஏன் சி.பி.ஐ., இதை மறுக்கவில்லை' என கேள்வி எழுப்ப சி.பி.ஐ., தரப்பிலிருந்து பதில் இல்லை.
கனிமொழிக்கு பெயில் கிடைக்குமா?
No comments:
Post a Comment