Wednesday, 14 July 2010

நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்- நேதாஜி


1943-45ல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் களம் அமைத்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போரிட்ட போது, அவரின் ஐ.என்.ஏ., படையில், 60 சதவீதம் தமிழர்கள், இந்திய விடுதலைக்காக, அந்தப் போரில் உயிர்த்தியாகம் செய்தனர்.பொருதடக்கை வாளும், மணிமார்பும் போர் முகத்தே எவர்வரினும் புறங்கொடாத பருவயிரத் தோள்களையும் கொண்டு போராடிய தமிழர்களின் வீரத்தை மெச்சிய நேதாஜி, "எனக்கு இன்னொரு பிறவி இருக்குமாயின், நான் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன்' என்று, நெஞ்சம் நெகிழ்ந்துருகக் கூறினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment