Thursday, 26 January 2012

போராடுவதற்கு கவலை படுவதே இல்லை?

        நர்சுகளின் போராட்டம் தேவை அற்றது. அவர்கள் சொல்லும் காரணமும் ஏற்று கொள்ள முடியவில்லை. அரசாங்கமும் தன் பங்கிற்கு மார்க் அடிப்படையில் செவிலியர் பயிற்சியை முடித்தவர்களுக்கு வேலையை கொடுக்காமல் ஒரு தேர்வு கமிஷனை கொண்டு தேர்வு நடத்தி அதில் தனியார் கல்லூரி அரசு கல்லூரி என்று பாகு பாடில்லாமல் நர்சுகளை வேலைக்கு அமர்த்த வேண்டும். அதிலும் தமிழர்களுக்கு முன்னிரிமை அளிக்க பட வேண்டும். தனியாத் கல்லூரியில் பயிலும் நர்சுகளை அரசாங்க மருத்துவமனையில் வேலைக்கு அமர்த்த கூடாது என்பது முட்டாள் தனமான வாதம். அவர்களும் தமிழர்கள்தான். ஒரு போட்டியை உருவாகினால் தான் நல்ல நர்சுகள் அரசாங்க வேலைக்கு வருவார்கள். அரசு மருத்துவமனைகளுக்காக , அதிக மார்க் வாங்கியவர்களை தேர்வு செய்து, அரசு மருத்துவமனைகளில் பல கோடி செலவிட்டு இவர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு, பின்னர் இவர்களைக் கைவிட்டு, திறமை குறைவான வெளியாட்களை நியமிப்பது அராஜகமே.அரசு நிதியும் வேஸ்ட்.ஒவ்வொரு அரசு நர்சிங் மாணவியும் குறைந்தது 20000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அனுபவத்துடன் தேர்ச்சியடைகின்றனர். ஆனால் தனியார் நர்சு பள்ளிகளைப் போய்ப் பாருங்கள் பெரும்பாலும் ஒன்றுமே தெரியாதவர்கள் கூட, பணம் கொடுத்து சீட் வாங்கி முறைகேடுகள் மூலம் பாஸ் பண்ணுவதே வழக்கம்.நர்சுகளின் திறமை ப்ராக்டிகலாக,பற்பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் வருவது. அனுபவத்தால் வருவது. ஏதோ நோயாளிகளே வராத தனியார் நர்சு பள்ளிகளில் இந்த அனுபவத்தைப் பெறவே வாய்ப்பில்லை,அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கே முதலில் வேலை தந்துவிட்டு, பிறகு மீதி இடங்கள் இருந்தால் தனியாருக்கு வாய்ப்பளிக்கலாம். அதுவும் செய்முறைத் தேர்வு மூலமே ஏனெனில் பாவப்பட்ட ஏழை நோயாளிகளின் வாழ்கை இவர்கள் கையில்

No comments:

Post a Comment