விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு
பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.சோதனை முயற்சியாக முதலில் 10 ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 20 மற்றும் 50 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக்கால் ஆன ரூபாய் நோட்டுகள் கனடா, மலேசியா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரசித்தம் (படத்தில் நீங்கள் பார்ப்பது கனடா நாட்டு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு) என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment