தென் சூடான்
பதினேழு வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டப்போரும், அதனைத் தொடர்ந்த சமாதான உடன்படிக்கையும், அதன்பின்னர் 1983-இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கி அதிலும் வெற்றி கண்டார்கள். 1983-இல் ஆரம்பித்த உக்கிரமான போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.
இன்று புதிதாக உருவாகப் போகும் தென் சூடான் நாட்டிற்கு நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. தென் சூடானின் கட்டுமானப்பணிகளிலும் தமிழீழத்தை சேர்ந்த பொறியியலாளர்கள் ஈடுபடவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வழைப்பு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈழப் போராட்டம்
1983ல் இனப்படுகொலை செய்த ஜெயவர்த்தனேவை விட மிகவும் கொடிய சர்வாதிகாரர்களாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, சரத் பொன்சேகா போன்றவர்கள் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் புலிகளின் தேவை முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து இருப்பதாக நான் நினைத்த தருணங்கள் உண்டு.
புலிகளின் சகோதர படுகொலைகளை கூட வரலாற்று ரீதியிலான தவறுகளாகவே நான் பார்த்தேன். தவிரவும் சகோதர படுகொலைகளுக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு போராளி இயக்கங்களுக்குள்ளும் தனி மனித மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. அந்த மோதல்களை பேசி தீர்க்காமல் துப்பாக்கிகளால் தீர்த்துக் கொண்டனர். போராளி இயக்கங்களுக்குள் சண்டையை வளர்த்ததில் அனைத்து போராளி இயக்கங்களுக்கும், இந்திய உளவு அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. எனவே மொத்த சகோதர படுகொலைகளையும் புலிகள் மீது போட்டு அவர்களை நிராகரிக்காமல் அந்த கசப்பான கறுப்பு பக்கங்களை கடந்து எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்தேன்.
உலகிலேயே காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை இராக்கிற்கு பிறகு இலங்கையில் தான் அதிகம். அதனை முன்னின்று நடத்துபவர்கள் அரசு படையினர். இவர்களிடம் இருந்தும், போர் சூழலில் இருந்தும் தங்களை பாதுகாக்க அகதிகளாக வெளியேருகிறார்கள்.
என்னைப் போலத் தான் பலரும் நினைத்தனர். தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக புலிகள் இருந்ததும் அதற்கு காரணம்.
இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவை தான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்சு போன்ற இரு நாடுகள் மட்டும் ஏதோ கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகள் இந்த பேரவலத்தை கண்டு அமைதியாக இருக்கும் பொழுது ஒரு தனி நாட்டினை நம் கையில் தூக்கி கொடுத்து விடுவார்கள் என நினைப்பது அப்பாவித்தனமாக தெரியவில்லையா ?
இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியநாடு, விடுதலை வேண்டி நிற்கும் தேசங்களுக்கெல்லாம் புதுத்தென்பைக் கொடுத்து வரலாற்றில் நிலைபெற்றிருக்கப் போகின்றது. விடுதலைக்காக போராடிய தேசங்களின் வரிசையில் இன்று தென் சூடான் விடுதலை பெறுகிறது. நாளை விடுதலை பெறப்போகும் தேசங்களில் தமிழீழமே முன்னிடத்தில் உள்ளது.
ப்படி சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தென் சூடானின் விடுதலைக்காக 1983 ஆண்டில் ஆயுதப்போரை மேற்கொண்டதோ, அதைப்போலவேதான் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதே ஆண்டில் தமிழீழ விடுதலைக்காக போரை ஆரம்பித்தார்கள். தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளாரோ, அதைப்போலவேதான் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராசபக்சேவும் போர்க்குற்றம் புரிந்தவராக உலக நாடுகளினால் வர்ணிக்கப்படுகிறார்.
சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை.
முன்னாள் சோவியத் ஒன்றியம் பிளவுபட்டு பல நாடுகள் உருவாகியதே, பல நாடுகள் உருவாகக் காரணமாக இருந்தது. மோண்ரிநீக்ரோ என்கிற நாடு 192 ஐநாவின் உறுப்பு நாடாக மே 21, 2006-இல் இணைக்கப்பட்டது. செர்பியாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்கிற போராட்டத்தின் விளைவே, மோண்ரிநீக்ரோ நாட்டு மக்களும் தேர்தல் மூலமாக தமது விருப்பை வெளிப்படுத்தி பிரிந்தார்கள். கிழக்கு தீமோரும் இந்தோனேசியாவின் அடக்கு முறைகளிலிருந்து விடுவிக்கப் போராடி, மே 20, 2002 விடுதலை பெற்றது.
விடுதலைப்புலிகள்
- நீதித்துறை முதல் பல அரச அமைப்புக்களை நிர்மாணித்து, அவற்றை வெற்றிகரமாக நடைமுறையில் வைத்திருந்தார்கள்.
- எந்தக்குற்றமும் இல்லையென்று சொல்லுமளவு சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது தமிழீழ காவல்துறையினரால்
விடுதலைக்காக
விடுதலைக்காக போராடி வரும் தேசங்களின் வரிசையில் அடுத்து தமிழீழத் தேசமே பிறப்பெடுக்கும். இதனை வென்றெடுக்க வேகமாக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தில் வதியும் மக்களிடம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழர்களின் கைகளிலேயுமே தங்கியுள்ளது.
தமிழீழ வல்லுனர்களின் செயற்பாடு தென் சூடானில் இடம்பெற இருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வே. இப்படியான செயல்கள் மூலமாக நாளை மலர இருக்கும் தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப இவ்வல்லுனர்களின் அனுபவமே போதும். அத்துடன், தென் சூடானும் தனது விசுவாசத்தை தமிழீழ தேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் காண்பித்து, ஒரு வருடம் அல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறவுகளைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும்
நான் ஒரு சாமானியன். என் மனதில் சரி என்று நினைக்கும் எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயம் செய்வதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். அதைத் தவிர வேறு எதுவும் என் எழுத்தினை செலுத்துவதில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன்.